தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்
- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு
















