சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு உருவாகியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தடம் பதித்த கொரோனா நோய்த் தொற்றால் தற்போது 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோhர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதில் 3,441 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால்,
கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுவதால், முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதுகுறித்த ஆய்வை முன்னெடுப்பதாகத் தெரிவித்தது.
இதற்கமைய, சென்னையில் 421 பேருக்கும், கோவையில் 428 பேருக்கும், திருவண்ணாமலையில் 410 பேருக்கும் ரத்த மாதிரிகள்
சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில, சென்னையில் 141 (33.4 சதவீதம்), கோவையில் 31 (7.2 சதவீதம்), திருவண்ணாமலையில்
35 (8.5 சதவீதம்) பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.






