சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
Ethiri.com – எதிரி இணையம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டி மாஸ்டருக்கு குழந்தை பிறந்துள்ளது.
சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
மனைவியுடன் சாண்டி மாஸ்டர்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர் இறுதிப்
போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.
சமீபத்தில் மனைவி சில்வியா கர்ப்பமாக இருப்பதாக சாண்டி மாஸ்டர் அறிவித்தார். பின்னர் சில்வியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி
வைரலானது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்
- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்
- கடல் முற்றுகை தொடர்ந்தால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ஈரான்
- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது











