கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

Spread the love

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

தமிழில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த முமைத்கான் மீது கார் ஓட்டுநர் ஒருவர் கார் வாடகை தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்
முமைத்கான்
மும்பையைச் சேர்ந்த நடிகை முமைத்கான், இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில்

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தனது கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில்

இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

கார் ஓட்டுநர் ராஜூ தெரிவிக்கும் போது, முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8

நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-த்தை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

முமைத்கான்

முமைத் கான் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம்

செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார். தன்னைப்போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக்கூடாது

என்பதற்காகவே இதை வெளியில் சொல்வதாகவும் கார் ஓட்டுநர் ராஜூ தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *