காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்
அதிருப்தியடைந்த தனது காதலியை அழைத்து வருவதற்காக அவரது சகோதரனின் ஏழு வயது மகளை இளைஞர் ஒருவரால் கடத்திச் சென்ற
சம்பவம் ஒன்று ஹொரணை, கோனபொல, எட்டம்பஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காதலிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வரவில்லை என்றால் கொலை சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர், தனது காதலியின் உறவினர் வீட்டிற்கு சென்று சிறுமியை ஒப்படைத்து விட்டு குறித்த இளைஞர் காதலியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்படி, கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், நேற்று (14) கோனாபினுவல
காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்
பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரின் காதலன் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, கோனாபினுவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் காதலனின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் பொறுப்பேற்றதுடன் , அது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது
- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை
- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது
- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு
- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்
- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை
















