இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Spread the love

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
    Spread the love         டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை மருத்துவமனை கொள்ளளவு நெருக்கடியால் டெங்கு மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது என நிபுணர் எச்சரிக்கை தற்போதைய கூட்ட நெரிசல் காரணமாக, உள்நோயாளிகளாக மருத்துவ சிகிச்சையும் சிறப்பு கவனிப்பும் தேவைப்படும் சில நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் வீடு திரும்புவது வருந்தத்தக்கது. இது டெங்கு தொடர்பான மரணங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ…
  • ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
    Spread the love         ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மால்டிவியன் (Q2) எனச் செயல்படும் ஐலேண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒரு புதிய இன்டர்லைன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சர்வதேச விமான நிலையம் தனது பிராந்திய வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரே டிக்கெட்டின் கீழ் மாலத்தீவு முழுவதும் உள்ள 17 உள்நாட்டு இடங்களுக்குத் தடையின்றிப் பயணிக்க முடியும். இந்த ஒப்பந்தம், மாலேயில் உள்ள வேலனா சர்வதேச…
  • யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
    Spread the love         யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி மனித-யானை மோதலுக்குத் தீர்வாக மூங்கில் உயிரி வேலி அமைக்க சீனா உதவும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் மனித-யானை மோதலுக்கு இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் மனித-யானை மோதலுக்கு, மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாக ‘உயிரி வேலி’ அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆதரவை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில்…
  • மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
    Spread the love         மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு (26) விஜயபுராவைச் சேர்ந்த குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் மற்றும் சேனை பயிரிடும் விவசாயி ஆகியோர் காட்டு யானையால் மிதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதன் விளைவாக, வனவிலங்கு அதிகாரிகள் தாக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், கோட்டியகலாவைச் சேர்ந்த குடிமைப் பாதுகாப்புத் துறை காவலர் டி.எம்.சுகத் நயானந்தா (42) மற்றும் விஜயபுராவைச் சேர்ந்த லியனகே விவசாயியான ரஞ்சித் சாந்தா ரஞ்சித் சாந்தா (47)…
  • SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
    Spread the love         SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை ,2019-ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய ஒரு சம்பவம் தொடர்பாக, பதுளை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என பதுளை மாவட்ட எம்.பி. சமிந்த விஜேசிரி நிரூபிக்கப்பட்ட பதுளை மாவட்ட எம்.பி. சமிந்த விஜேசிரிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை வட்டச்சந்திக்கு அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​சட்டவிரோதமாக தடுத்து வைத்தல்,…