அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2024 வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (16) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதன்போது, “அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 20 ஆயிரத்தால் அதிகரியுங்கள்”, ” எரிபொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறையுங்கள்” , “பொருட்களுக்கு விலைகளை
அதிகரிக்கும் போது இரச ஊழியர்களை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று இதுபோன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
- பெட்ரோல் விலை குறைப்பு
- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு
- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
















