Tag: விபத்தில் இரு இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/08/2023
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்by நிருபர் காவலன்
- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கைby நிருபர் காவலன்
- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்by நிருபர் காவலன்
- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழைby நிருபர் காவலன்












