7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில் உள்ளது. திங்கட்கிழமை (14) இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட், சிறப்பு அனுமதி பாஸ்எதுவும் இல்லாமல், விமான

நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும்கவுன்ட்டர் பகுதி வரை சென்றுஅங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்தஇளைஞரைப் பிடித்து அடித்தஅதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறிஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார்.

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்

மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-5988204, 077-5547218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது