Tag: மூவர் கைது
சமூக ஊடகங்களில் பரவிய பள்ளித் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது
சமூக ஊடகங்களில் பரவிய பள்ளித் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது
சமூக ஊடகங்களில் பரவிய பள்ளித் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது ,ஹட்டன் பகுதியில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்த காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாணவர் குழு
ஒரு மாணவர் குழு மற்றொரு மாணவரைத் தாக்குவதைக் காட்டும் காணொளி வெளிவந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை
தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் பள்ளி தொடர்பான தகராறுடன் தொடர்புடையது. பாதிக்கப்பட்ட மாணவர், மற்றொரு மாணவர்
புகைபிடிப்பதாகக் கூறி வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும், அதுவே இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் விசாரணையில்
தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு மாணவர்கள் இந்தத் தாக்குதலில் இணைந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி முதல்வர் அந்த நேரத்தில் தலையிட்டு
பள்ளி முதல்வர் அந்த நேரத்தில் தலையிட்டு, இந்தப் பிரச்சினையை பள்ளி நிர்வாகத்திற்குள்ளேயே தீர்க்க முயன்றதால், ஆரம்பத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், சமூக ஊடகங்களில் காணொளி பரவியதால் ஏற்பட்ட மன உளைச்சலைக் காரணம் காட்டி, பாதிக்கப்பட்ட மாணவரும் அவரது தாயாரும் மார்ச் 28 அன்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
காயமடைந்த மாணவர் பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலிலும், அதன் காணொளிக் காட்சிகளைப் பகிர்ந்ததிலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று மாணவர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள்; அவர்கள் ஹட்டன் மற்றும் டிகோயா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஹட்டன் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது
ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது
ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது ,சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள் நடத்திய சட்டவிரோத ஜோதிட நிலையம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை தும்பளை வீதியில் இந்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது.
இந் நிலையத்தினை இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த மூவரே நடாத்தி வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து மேற்படி இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், தொடர்ந்தும் ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப்
பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது , அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்தது.
இதனையடுத்து மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
சிங்கராஜா வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனைby நிருபர் காவலன்
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்by நிருபர் காவலன்
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்by நிருபர் காவலன்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றனby நிருபர் காவலன்
கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
தமிழ் தேசிய முன்னணியாக விளங்கும் ,கயேந்திர குமார் ,
அணியை சேர்ந்த மூவர் காவல்த்துறையால கைது செய்யப் பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் மருந்தாங்கேணி சம்பவம் தொடர்ப்பில் ,
இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னரே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .
இது அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நிகழ்வு என குறித்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ,
அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Featured
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Featured
மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
மேற்கு லண்டன் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இந்த படுகொலையுடன் தொடர்புடைய 25 வயது ஆண் மற்றும் 37 மற்றும் 43 வயதுடைய இரு பெண்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கடந்த 25 தாம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
பிரிட்டன் லண்டன் பகுதியில் கத்தி குத்து கொலைகள், மற்றும் இவ்விதமான வன்முறை,சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது
லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது
லண்டன் பிரான்ஸ் எல்லையோர சுரங்கவழி பாதையூடாக கார் ஒன்றில் பிரிட்டனை
விட்டு பிரான்சுக்குள் நுழைய முயன்ற ஆண் , இரு பெண்கள் எல்லையோர காவல் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் எடுத்து சென்ற கைப் பையை சோதனை செய்த பொழுது அதற்குள் இருந்து
ஒருலட்சம் பவுண்டுகள் மற்றும் ,அதே காரில் பயணித்த இரு பெண்களிடம் இருந்து
தலா முப்பத்தி ஆறாயிரம் பவுண்டுகள் மீட்க பட்டுள்ளன
மூவரும் கைது செய்ய பட்ட நிலையில் இரு பெண்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
ஆண் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்
புறப்பட்டி வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது
இவர்கள் மூவரும் பிரிட்டன் Folkestone பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது




























