Posted in மருத்துவம்

அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

பெண்களுக்கு அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது .இதனை ஏற்படுத்தும் காரணி என்ன ..?


பெண்ணின் கருவுருவத்தை சுற்றி காணப்படும் கருப்பையில் ஏற்படும் அது இரத்த குருதியாக வெளியேறும் காரண தொழில் பாடு எங்கு உருவாகிறது .

மாதவிடாய் என்பது கருப்பையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக இரத்த கசிவு ஏற்படும் இதன் பொழுது வலிகள் ஏற்படும்.

இந்த வலிகளை கட்டு படுத்த அல்லது இது ஏற்பட முக்கிய காரணம் என்ன ..?மாதவிடாய் இல்லாத காலத்திலும் வலிகள் ஏற்படும் அது எவ்வாறு ஏற்படுகிறது.

கண்டிப்பாக பெண்கள் இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

மலத்துடனும் இந்த இரத்த கசிவு ஏற்படும் ,ஆகவே பெண்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Error: View 6f7d65ec2l may not exist
Posted in மருத்துவம்

வெண் புள்ளியிலிருந்து விடுதலை

வெண் புள்ளியிலிருந்து விடுதலை


வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை.

வெண் புள்ளியிலிருந்து விடுதலை தரும் வைத்தியம்
வெண்புள்ளி நோய்


மனித இனத்தை பாதித்து வருகின்ற பல நோய்களில் தோலின் மேற்பகுதியில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சேர்க்கலாம். மேலை நாட்டு மருத்துவத்தில் இந்தக்

குறைபாட்டிற்கு நிவாரணியில்லை. ஆனால் தொன்றுதொட்டு மனிதர்களை பாதித்து வரும் வெண் புள்ளிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது.

சரக் வைத்தியர் என்பவர் தான் இந்த நோய்க்கு முதல் முதலாக மருத்துவத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நோய்க்கு ஆயுர்வேதம்

அரியதொரு தீர்வை தந்திருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் பலரும் முழுமையாக குணமடைந்து விட்டார்கள். பலர் குணமடைந்து வருகிறார்கள்.

குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த வைத்தியர் ரமேஷ் நாயுடு தன்னுடைய வைத்தியத்தால் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெண்புள்ளிகளுக்குச்

சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் வைத்தியம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் குணமாகி உள்ளனர்.

இந்த நோயின் அடிப்படை காரணம் என்ன?

நமது உடலில் வைட்டமின் பி, ஹீமோகுளோபின், ரத்தம் இவை போதுமான அளவில் இல்லாதபோது இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய் எந்த

வயதினரையும் தாக்கலாம். இந்த நோய் குணமாவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. குணமாவது நோயாளியின் வயது, நோயின் தீவிரம், உடல்நிலை மாறுபாடு,

மனஅழுத்தம் என்ற பல அம்சங்களை சார்ந்தது. கபம், பித்தம், வாதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பொறுத்து நோயின் நிலை மாறுபடும். இந்த மாற்றங்கள்

சமன்பாட்டில் இருக்க வேண்டும். இவை ஏறுமுகமாக இருக்குமாயின் சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுகின்றன.

உணவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த வெண்புள்ளிகளை குணப்படுத்த முடியுமா?

வெண் புள்ளியிலிருந்து விடுதலை

கொய்யா, ஆரஞ்சு பழங்கள் உண்ணுவதை குறைக்க வேண்டும். மேலும் ஸ்வீட் லைம், கருப்பு திராட்சை,

பச்சை வாழைப்பழம், முள்ளங்கி, பூசணிக்காய், மீன், கோழிக்கறி, முட்டை, உளுத்தம் பருப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள், புளி இவைகளை முடிந்த

அளவிற்கு நமது உணவு பட்டியலில் இருந்து குறைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வேகவைத்து

சேர்க்க வேண்டிய உணவு

உணவில் சேர்க்க வேண்டும். செவ்வாழை, மாதுளம்பழம், பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம், சுரைக்காய், கருப்பு

மூக்கடலை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைத்தியர் ரமேஷ்நாயுடு சொந்தமாக மருந்து

தயாரிக்கிறார். இந்த மருந்து 24 மணி நேரத்திற்குள் மாறுபாட்டை கொண்டு வரும். வைத்தியர் ரமேஷ்நாயுடு இந்த மருத்துவ சேவையில் கடந்த 27 ஆண்டு காலமாக ஈடுபட்டிருக்கிறார்.

வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. இது தொடர் சிகிச்சையால் குணமாகும் தன்மை உடையது.


தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை. இது பரம்பரை நோய் அல்ல.


நூறில் ஒருவருக்குத்தான் இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது
. அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.


ஆயுர்வேதம் ஒன்றுதான் இந்த நோயை குணப்படுத்தும்.

    Posted in மருத்துவம்

    மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

    மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

    மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.

    ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
    மார்பக புற்றுநோய்


    ஒவ்வொரு மார்பக புற்றுநோயும், மார்பகத்திற்குள் (5 செ.மீக்கும் குறைவான) அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும், மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர்

    கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே, ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.

    ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும்

    • மார்பக அறுவைசிகிச்சை (Breast Surgery)
    • வேதியியல் சிகிச்சை (Chemotherapy)
    • கதிரியக்க சிகிச்சை (Radio Therapy)
    • இலக்குடைய சிகிச்சை (Targeted Therapy)
    • ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy).

    மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.

    மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது, ஆரம்பகால

    மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும்.

    அறுவைசிகிச்சையில், அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.

    மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

    அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து, கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு (Axillary dissection) செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை – ஆரம்பகால

    மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை

    குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது, மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.

    கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன.

    கதிரியக்க சிகிச்சைமுறை – பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு, மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கதிரியக்க சிகிச்சை எப்போதும்

    பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

    ஹார்மோன் சிகிச்சைமுறை- தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் (ஹார்மோன் ஏற்பிகள்) (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள்) கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம்.

    ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும்:

    • மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா
    • அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை (மெனோபாஸ்) அடைந்துவிட்டாரா?

    ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக புற்றுநோய் (மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில்) மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக

    புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை (Targetted Therapy) அல்லது உயிரியியல்

    சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான

    பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை Trastuzumab ஆகும். அதாவது HER 2 ரிசப்டர்களுக்கு எதிராக Herceptin மருந்து செலுத்துவது

      Posted in மருத்துவம்

      பிரசவத்திற்கு எப்படி கிளம்ப வேண்டும்

      பிரசவத்திற்கு எப்படி கிளம்ப வேண்டும்

      தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்துப் பழக்கிவிடுவது நல்லது.

      கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.

      இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

      பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

      அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம்.

      நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

      கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல்

      சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

      பிரசவத்திற்கு எப்படி கிளம்ப வேண்டும்

      நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

      குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க

      வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதி


      நீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.

        Posted in மருத்துவம்

        பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

        பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

        கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.

        பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
        பச்சை காய்கறிகள்


        கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.

        அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.

        காலிபிளவர்

        முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த

        காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும்

        பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

        இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.

        கத்திரிக்காய்

        கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை

        குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

        பீட்ரூட்

        பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள்.

        பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு

        அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

        காளான்கள்

        வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது.

        இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

        கேரட்

        கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம்.

        அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.

        ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும்.

        அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.

          Posted in மருத்துவம்

          இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

          இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

          முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன.

          இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

          இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

          காலை உணவினை அரசனை போலவும், மதிய உணவினை இளவரசரைப்போலவும், இரவு உணவினை ஏழையை போலவும் சாப்பிட வேண்டும் என்பது உணவுமுறையை எடுத்துரைக்கும் வாழ்வியல் கூற்றாகும்.

          3 வேளை உணவையும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது. இதில் இரவு உணவை பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்தது.

          ஆனால் இன்றைக்கு பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, இரவு உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவிலும் சாப்பிட முடிவதில்லை என்பதே உண்மை.

          முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

          சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் இரைப்பை குடலை நோக்கி மேலே ஏறுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் குடல்

          பகுதியில் புண்கள் உண்டாகின்றன. காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.

          துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உள்ளது. அவற்றை போல எண்ணெய்யில் பொரித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றவை அல்ல.

          அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டவை.

          முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாகும்.

          இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

          தயிர், கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவதால் சில ஒவ்வாமைகளில் இருந்து தப்பிக்கலாம். அவற்றிற்கு மாற்றாக காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள், மிளகு, மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை பருகலாம்.

          இவையெல்லாம் இரவு உணவில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளாகும். இவற்றில் சற்றே கவனமாக இருந்தால் செரிமான மண்டலம் நிம்மதி அடையும். ஏனெனில் நாம் உறங்கி

          இளைப்பாறும் நேரத்தில் தான் செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும். முறையற்ற இரவு உணவால் அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

            Posted in மருத்துவம்

            பசியை அதிகரிக்க இதை பண்ணுங்க

            பசியை அதிகரிக்க இதை பண்ணுங்க

            வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

            காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில வகை பானங்களை பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

            இரவில் சாப்பிட்ட பிறகு 8-9 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் எழுந்திருக்கும்போது முதலில் சாப்பிடுவதை வயிறு, குடல் சட்டென்று உறிஞ்சிவிடும்.

            வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

            வெறும் வயிற்றில் என்னென்ன பானங்களை பருகலாம்? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

            மஞ்சள் பால்: இந்திய உணவுகளில் மஞ்சள் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது. இது அனைத்து விதமான அழற்சியையும் போக்கும். குறிப்பாக சுவாச பிரச்சினைகளுக்கு சிறந்த

            நிவாரணியாக செயல்படக்கூடியது. சளி, இருமல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

            ஒரு கப் சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். சுவைக்கு தேன் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். தினமும் காலையில்

            எழுந்ததும் இந்த மஞ்சள் பாலை பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் பருகலாம். மஞ்சள் பாலுடன் மிளகு, கிராம்பு சேர்த்தும் பருகலாம். இது தொண்டை புண்களையும் ஆற்றும்.

            சீரக நீர்: வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். எடை குறைப்புக்கும் வழிவகுக்கும். எடையை குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்ற

            பசியை அதிகரிக்க இதை பண்ணுங்க

            விகிதத்தை மேம்படுத்தலாம். இரண்டு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை போட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

            துளசி டீ: காலையில் எழுந்ததும் துளசி சாறு அல்லது துளசி டீ பருகுவது செரிமான செயல்முறையை எளிமையாக்க உதவும்.

            குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒரு கப் சூடான நீரில் சிறிதளவு துளசி சாறு கலந்தும் பருகலாம். சுவைக்கு சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

            இஞ்சி பானம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பானம் இது. ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஆற விடவும்.

            பின்னர் உலர்ந்த சாமந்தி பூ, இஞ்சி, ஆரஞ்சு தோல், லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சிறிதளவு சேர்ந்து கொதிக்கவிடவும்.

            கொதிக்க தொடங்கியதும் இறக்கி ஆறவைத்து பருகலாம். இந்த இஞ்சி பானம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

            கொத்தமல்லி பானம்: கொத்த மல்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் நீரை பருகுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

            ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை

            போட்டு இரவில் ஊறவைக்கவும். காலையில் அந்த நீரை வடிகட்டி பருகிவிடலாம். பின்பு கொத்தமல்லி விதைகளை சமையலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

            வேப்ப இலை டீ: வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2 வேப்ப

            இலைகள், 4 துளசி இலைகள், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் ஊற விடவும். அதில் 2 மிளகு, 2 கிராம்புகளை பொடித்து சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையை இரண்டு

            நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டிக்கொள்ளவும். ஓரளவு ஆறியதும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இந்த டீயை ஒரு வாரம் தொடர்ந்து பருகி வந்தால் சருமம் பொலிவு பெறும்.

            காலையில் டீ, காபிக்கு மாற்றாக மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றை பருகுவது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

            இதனை பருக விரும்பாதவர்கள் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகலாம்.

              Posted in மருத்துவம்

              கோபம் வந்தால் இதை பண்ணுங்க

              கோபம் வந்தால் இதை பண்ணுங்க

              கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

              மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.

              சிலருக்கு கோபம் வந்தால் உடனே ஆக்ரோஷமாகிவிடுவார்கள். நிதானத்தையும், பொறுமையையும் இழந்து கத்தத் தொடங்கிவிடுவார்கள்.

              வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை

              கொட்டிவிடுவார்கள். அவை மற்றவர் மனதை காயப்படுத்தக்கூடியதாகவும், காது கொடுத்து

              கேட்க முடியாததாகவும் இருக்கும். தனக்கு நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும் கோபத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்திவிடுவார்கள்.

              சம்பந்தப்பட்டவர் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாலும் அதை காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள்.

              அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபம், அவர்களுக்குத்தான் பாதகத்தை

              உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், சிலருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிவிடும்.

              அதுவே தொடரும்போது பல்வேறு நோய்

              பாதிப்புகளால் அவதிப்பட நேரிடும். உடல் நலத்தை கெடுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான வழிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழிமுறைகள் இதோ:

              கோபம் வந்துவிட்டால் மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிம்மதி குலைந்துவிடும். கோபம் வரும்போது நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அப்போது 1 முதல் 10, 20 வரை

              எண்களை மனதுக்குள் பொறுமையாக எண்ணிக்கொண்டே வரலாம். அப்படி செய்யும்போது மனம் இலகுவாகிவிடும். கோபமும் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்.

              கோபம் வந்தால் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். அவை கேட்பவர்கள் மனதை கடுமையாக பாதிக்கும்.

              கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு சிந்திப்பதுதான் சரியான வழிமுறையாக அமையும். என்ன பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கலாம்? பிறர் மனம் புண்படாதபடி சிரித்த

              முகத்துடன் எப்படி பேசுவது? என நிதானமாக யோசித்துவிட்டு பேச வேண்டும். அப்படி பேசும்போது கோபம் வெளிப்பட்டாலும் அதனை நிதானமாக கையாண்டுவிடலாம்.

              கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர்கள் சமாதானம் செய்தாலும் அதுவும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் சில நிமிடங்களை

              கோபம் வந்தால் இதை பண்ணுங்க

              கழிப்பதுதான் நல்லது. தனிமையில் அமர்ந்திருந்து எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை அமைதிப்படுத்தலாம்.

              நடைப்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்த உதவும். சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து வரலாம்.

              அப்படி செய்தால் மூளை செல்கள் ரிலாக்ஸ் அடைந்து மனம் இலகுவாகும்.

              மனதுக்கு நெருக்கமானவர்கள் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டால் அமைதி காப்பதுதான் நல்லது.

              இல்லாவிட்டால் கடுமையான வார்த்தைகள் வெளிப்பட்டு இருவரின் மனமும்

              வேதனைப்படக்கூடும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்துவிடுவதுதான் நல்லது.

              அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.

              எந்த சூழ்நிலையிலும் கோபம் நீண்ட நேரம் நீடிக்க அனுமதித்துவிடக்கூடாது. அது மனதை பலவீனப்படுத்திவிடும்.

              கோபத்தை தணிப்பதற்கு மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில்

              ஈடுபட வேண்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது, இசையை கேட்பது மனதை சாந்தப்படுத்தும்.

                Posted in மருத்துவம்

                பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

                பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

                பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.


                பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.

                இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

                பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

                சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.

                மனநிலை முக்கியம்

                ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை

                கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது

                உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

                உடல் மேல் கவனம்

                நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன

                உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும்.

                உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.

                பொழுதுபோக்கு

                டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது

                ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை…

                ஆரோக்கியமான உணவு

                நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

                வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

                நல்ல நட்பு

                எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது.

                நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி

                இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.

                  Posted in மருத்துவம்

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

                  பெண்கள் பெரும்பாலும் ஆடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் காண்பிக்கும் அக்கறையை உள்ளாடை வாங்கும் விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இறுக்கமான, தடிமனான, தவறான அளவு

                  கொண்ட பிராவை தேர்ந்தெடுத்தால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

                  குறிப்பாக அடிப்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை அணிந்து தூங்கும்போது பாதிப்புகள் அதிகமாகும்.

                  தவறான பிரா தேர்வால் ஏற்படும் இன்னல்கள் பற்றி பார்ப்போம்.

                  இறுக்கமான பிரா அணியும்போது ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதிலும் எலாஸ்டிக் அல்லது ஒயர் பதிக்கப்பட்ட பிராவை அணியும்போது பாதிப்பு அதிகமாகும். அவை இயல்பாகவே இறுக்கத்தை

                  ஏற்படுத்திவிடும். தூங்கும்போது இத்தகைய பிராவை அணிவது அசவுகரியத்தை உண்டாக்கும்.

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  இறுக்கமான பிரா அணிவது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். சவுகரியமாக தூங்க முடியாது.

                  இறுக்கமான பிரா அணிவது உடல் பகுதியில் எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் தூக்கமும் தடைப்பட்டு போகும். தூங்கும்போது அடிப்பகுதியில் ஒயர்கள்,

                  பட்டைகள் இல்லாத பிராவை உபயோகிப்பது நல்லது. வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது.

                  அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

                  எலாஸ்டிக் தன்மை கொண்ட பிராக்கள் இறுக்கத்தை உண்டாக்கும்போது அவை உடலில் பதியும் பகுதிகளில் நிறமிகள் பாதிப்புக்குள்ளாகும்.

                  தூங்கும்போது இந்த பிராக்களை அணியும்போது

                  நிறமிகள் அதிகமாகும். அதன் மூலம் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும். மென்மையான அல்லது உடலமைப்புக்கு பொருந்தும் தளர்வான பிராவை அணிந்து கொள்வது நல்லது.

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் நிணநீர் அடைப்பு பிரச்சினையும் உண்டாகும். இது பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படும்.

                  மார்பகங்களில் நீர் வீக்கம் பிரச்சினையும் ஏற்படும். வலியற்ற கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

                  கோடை காலங்களில் இறுக்கமான பிரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரிக்கும்.

                  செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும். காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் நல்லது.

                    Posted in மருத்துவம்

                    சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…

                    சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…

                    உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…

                    பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

                    பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. சுறுசுறுப்பை கூட்டக்கூடியது. கொழுப்பு குறைந்தது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

                    முக்கியமான நோய் எதிர்ப்பு பொருளான ‘வைட்டமின் சி’, முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ கிடைக்கிறது. தொடர்ச்சியாக ‘வைட்டமின் சி’ உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

                    ‘வைட்டமின் பி-5’, ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் பி-1’ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற் செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

                    பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

                    முட்டைக்கோஸில் ‘வைட்டமின் கே’, நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் ‘வைட்டமின் கே’ விற்கு உண்டு.

                      Posted in மருத்துவம்

                      பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்

                      பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்

                      பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

                      பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்
                      வெள்ளைப்படுதல் பிரச்சினை


                      இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.

                      இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.

                      எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

                      தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

                      மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.

                      சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
                      இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?

                      • மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
                      • பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
                      • நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

                      வீட்டு வைத்தியம் உண்டா?

                      • கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
                      • உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

                      • தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
                      Posted in மருத்துவம்

                      சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                      சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                      பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

                      பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில்

                      கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

                      மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை

                      கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.

                      சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                      அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது.

                      அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

                      இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம்

                      கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.

                        Posted in மருத்துவம்

                        கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                        கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                        மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.


                        மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம்.

                        அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

                        கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                        அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர்

                        இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.

                        இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள்.

                        இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.

                        பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும்,

                        விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு.

                        தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுடன் விடிகிற பொழுது, நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர்

                        குடிக்க முடியாது. அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம்.

                        இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை

                          Posted in மருத்துவம்

                          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

                          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

                          ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.


                          ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என

                          சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

                          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

                          தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.

                          சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

                          பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

                          எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.

                          தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர்

                          முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

                          தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில்

                          , ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

                          கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

                          தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும்.

                          காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

                          சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும்.

                          தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்

                            Posted in மருத்துவம்

                            பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                            பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                            நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

                            பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.

                            அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம்.

                            1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் அருந்துவதை மறந்து விடுகின்றனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகக் குறைவான நீரை

                            அருந்துகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. தாகத்தின் போது நம் உடலுக்கு ஏற்ப போதுமான நீரை அவ்வப்போது குடித்து விடவேண்டும்.

                            1. வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகட்டும் காலை உணவு என்பதனை நேரத்திற்கு பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இல்லை.
                            2. இதனால் அவர்கள் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.முடிந்த அளவு காலை உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

                            பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                            1. நேரமின்மையால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி பெண்கள் செய்வது இல்லை. வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி தானே என்றும் கேட்கும் பெண்களுக்கு, அது உடற்பயிற்சி அல்ல
                            2. . வீட்டு வேலையினால் உங்க கலோரிகள் எரிக்கப்படுவது இல்லை. எனவே பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.இது உங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.
                            3. பெண்கள் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்கு தீனியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர்.
                            4. இதனால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
                            5. பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். நியூட்ரிஷன் சார்ந்த பழவகைகளை அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்வது இல்லை.
                            6. ஆனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பழங்களை அதிகம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்பட்டு மிகவும் வலிமை இழந்து போகாமல் இருக்க நீங்கள் உண்ணும் பழ வகைகள் உங்களை பேணிக்காக்கும்.

                            பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்வில் இந்த அறிந்து பழக்கங்களை கட்டாயமாக்க முயற்சி செய்யுங்கள்.

                              Posted in மருத்துவம்

                              முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                              முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                              முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.


                              மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை

                              கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல்

                              ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

                              முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:

                              உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

                              அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற

                              வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.

                              கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும்

                              உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.

                              முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்

                              கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை.

                              முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.

                              பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

                              முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                              கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.

                              ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

                              பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.

                              முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான

                              கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.

                                Posted in மருத்துவம்

                                சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

                                சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

                                உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.

                                நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு கிண்டியில் உள்ள டாக்டர்

                                ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

                                சர்க்கரை நோயை கண்டறிய டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்( Diabetes Risk Score) என்று முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும்

                                எளிமையானது. இந்த முறையில் இரத்த பரிசோதனை செய்யாமலேயே உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

                                சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

                                முதலாவது முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.

                                டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்

                                3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்

                                5வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

                                இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.

                                நோயானது உடலில் பரவாது தடுத்திட உணவு பழக்கம் மற்றும் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கிய அகாரணமாக அமைகிறது

                                இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

                                  Posted in மருத்துவம்

                                  வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                                  வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                                  உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.

                                  வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும் சட்னி
                                  பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி
                                  தேவையான பொருட்கள்

                                  பூண்டு – 12 பற்கள்

                                  இஞ்சி – அரை கப்
                                  காய்ந்த மிளகாய் – 10
                                  உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
                                  புளி – நெல்லிக்காய் அளவு
                                  வெல்லத்துருவல் – அரை டீஸ்பூன்

                                  வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
                                  கடுகு மற்றும் உளுந்து – தலா 1 டீஸ்பூன்

                                  செய்முறை

                                  வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

                                  இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

                                  வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.

                                  காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.

                                    Posted in மருத்துவம்

                                    உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க

                                    உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க

                                    இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.

                                    உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இந்த டீ குடிங்க…
                                    கருஞ்சீரக டீ
                                    தேவையான பொருட்கள்

                                    கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

                                    புதினா – ஒரு கைப்பிடியளவு
                                    இஞ்சி – 1 இஞ்ச் அளவு
                                    தேன் – 2 ஸ்பூன்

                                    செய்முறை

                                    ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

                                    உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க

                                    அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.

                                    அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.

                                    இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.

                                    இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

                                    ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.

                                    காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

                                    தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும்.

                                    அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.

                                    இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.