Tag: மண்மேடு சரிந்து விழுந்ததில்
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விமல் ஜயசிறி (62) என்பவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
உயிரிழந்தவர் கூலித் தொழிலாளி என்றும், (02) நாவலப்பிட்டி உயர் நீர்ப் பகுதியில் வீடொன்றுக்கு மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, மோசமான காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேட்டின் கீழ் விழுந்த நபரை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைதுby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்by நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணைby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்by நிருபர் காவலன்












