Tag: பிளவு
ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு
ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு
ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு ,ஸ்ரீ பொதுஜனபெரமுன, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் சமல்ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணில்விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ஏமாற்றிய காதலரை, தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பிரபல பாப் பாடகி ஷகிரா தூதுவிட்டுள்ளார்.
காதலருடன் பிளவு? பாடல் வரிகள் மூலம் தூதுவிட்ட பிரபல பாடகி ஷகிரா
ஷகிரா
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
இதன்பின்பு இவர்களது காதல் தீவிரம் அடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த தம்பதிக்கு இடையே நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.
அதற்கேற்ப, பாடகி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக சென்று பிக் வசித்து வந்துள்ளார். இதுதவிர பிக், சக வீரரான ரிக்கி புக் மற்றும்
பிற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, வேறு சில பெண்களுடன் நள்ளிரவு 2 முதல் அதிகாலை 3 மணிவரையில் ஒன்றாக வெளியே சுற்றி திரிந்துள்ளார். பார்ட்டியிலும்
கலந்து கொண்டுள்ளார். இந்த விவரம் ஷகிராவுக்கு தெரிய வந்துள்ளது. இது பிரிவை வலுப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
சமீபத்தில் ஷகிராவின் புதிய ஹிட்டான பாடல் ஒன்றின் வரிகளும், இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை விளக்கியுள்ளது. அந்த பாடல் வரிகளில், “உன்னால்
ஏற்பட்ட காயம் எனது தோலை திறக்கவில்லை. ஆனால் அது என்னுடைய கண்களை திறந்துள்ளது. உனக்காக அழுது, அழுது அவை சிவந்து விட்டன என எழுதப்பட்டு
உள்ளன. அதனை இப்போது நீ உணருகிறாய் என்று நன்றாக தெரிகிறது. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். நீ பொய் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும்”
என்றும் அதில் எழுதப்பட்டு உள்ளது. ஷகிரா தற்போது புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். டேன்சிங் வித் மைசெல்ப் என்ற நடன
நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த பாடல் வரிகள்
மூலமாக இவர்களின் பிரிவை உறுதிபடுத்திகிறாரா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.








