Tag: பிரதமர் மோடி
பிரதமர் மோடி இலங்கை வருகிறார்
மோடி இலங்கை வருகிறார்
பிரதமர் மோடி இலங்கை வருகிறார் ,இலங்கை வருகிறார் பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்கள்வெளியாகி இருக்கின்றது .
இவர் அதை இலங்கை வருகை தொடர்பான விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கையுடன் பேசுவதற்காக இலங்கையினுடைய அரச அதிகாரிகள் மற்றும் இந்தியாவுடையவெளியுறவு மந்திரியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார்
இந்தியா பிரதமர் இலங்கை வருகின்ற பொழுது யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார் எனவும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனப்படும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கை வருகின்ற இவருடனான பயணத்தின் பின்னர் தமிழருக்கான ஒரு தீர்வை கொடுத்து அதனூடாக பாரதியார் கட்சியின் ஆதரவை தமிழகத்தில் கட்டி காக்கும் நடவடிக்கை இவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இரண்டாவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள நரேந்திர மோடியின் இந்த பயணத்தில் தாமததிற்கான தீர்வு வழங்கப்படுமா
அதன் ஊடாக மிகப்பெரும் ஒரு மாற்றம் காணப்படுமா? என்கின்ற கேள்வியை இப்பொழுது எலிப்ப பட்டுள்ளது .
நரேந்திர மோடி இலங்கை வந்து சென்றாலும் தமிழர்களுக்கு இவ்விதமான விமோசனமும் கிடைக்காது என தமிழ் அரசியல் கட்சிகள் இப்பொழுது தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால் இந்தியா மிக முக்கியமான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை, இன பிரச்சனைக்கு தீர்வுக்கான அடிப்படை ஏற்படுத்துவார் என தெரிவிக்க படுகிறது ,
போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (25) பயணம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘தேஜஸ்’ இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள்
போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
பெங்களூருவில் நேற்று காலை பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார்.
பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன்
பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணித்தேன். இதில் பயணித்த
அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார் .
காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி தயாரின் மறைவு குறித்து தெரிவித்திருந்தார்.
அகமதாபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று காலை (30) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 100.என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் நாளை காலை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
மோடி அஞ்சலி செலுத்திய காட்சி
தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர்
உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் சூலூரில் இருந்து ராணுவ விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன.
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் இன்று இரவு 8 மணியளவில் டெல்லி வந்தடைந்தன. பாலம் விமானப்படை தளத்தில் அவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள்
நாளை காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை
அடுத்து இருக்கிறது. அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு
அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மோடி
இதேபோல விபத்தில் பலியான மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் டெல்லியில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய ‘நீட்’ தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை தலைதூக்குகின்றன.
மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை தேவைப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
பிரதமர் மோடி
டெல்லி பயணத்திற்காக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, காலை 7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
காலை 10 மணிக்கு அவர் டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி
அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கிறார்.
அதில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிப்பார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை
செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களும் அங்கு இருக்கின்றனர்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது

























