இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த ,உணவு பொருட்களில் ,பால்மா பைகள் காலாவதியான நிலையில் உள்ளதாக, கணடறிய பட்டுள்ளது.

குறித்த பால்மா பைகளில் ,அதன் முடியும் திகதி காணப்படவில்லை ,இதனால் அந்த பால்மா பாக்கட் காலாவதியானதாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

எனினும் இது தொடர்பான சோதனைகள் இடம்பெற்றுள்ளது .

அவ்வாறு காலாவதி என ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் திகதி பதிவிடப்படாது உள்ளமையால், பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக ,உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார் .

மேற்படி சம்பவம் ,தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்

    இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.

    உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.

    குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து

    ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று

    குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.

      Posted in இலங்கை செய்திகள்

      பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்

      பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்

      பால்மா, சீமெந்து, கேஸ் என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

      இதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டு நேற்று(8) வெளியிடப்பட்டுள்ளன.

      ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


      கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும் உரிய பொருட்களை கூடுதலான விலையில் விற்பனை செய்யும்


      நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி வர்த்தக அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

        Posted in Uncategorized

        பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

        பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

        துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

        இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

        இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

        சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.