பால் மா விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பால் மா விலை அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு .இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் மா விலைக் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பால் மா விலைக் குறைப்பு

பால் மா விலைக் குறைப்பு

பால்மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No posts found.