தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து
Posted in உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து

தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து

ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தில் தீ பரவியுள்ள நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீயில் சிக்கியுள்ள பலரை , தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தில் கட்டிடம் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு
Posted in உலக செய்திகள்

புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு

புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள புத்தகாயாவில் உள்ள காய்கறி சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் பீகார் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன