நட பிணமாய் இன்றும்
Posted in கவிதைகள்

நட பிணமாய் இன்றும்

நீ ,,
நான் ,,
எனறு இருந்த நாம்
நாம் என்று ஆன போது

நமக்குள்
ஏனோ கருத்து மோதல்..

கருத்துக்களை பூ என
நினைத்து அள்ளி அள்ளி வீசினாய் ..
அதில் முள்ளும் கலந்து தான்
இருக்குது என்று நான்
அறிந்திருக்கவில்லை ..

பல ஏமாற்ராத்தின் புயலில்
சிக்கிய நான்
வலியின் ரணத்தில் தான்
வாழ்க்கை பயணம் என்று இருந்தேன்
மீண்டும் சூராவளியாக
வந்த நீ
என்னை மீட்டுவாய்
என்று இருக்க ..
என் வாழ்க்கையில்
கோர தாண்டவம் ஆடியதும்
ஏனோ..?

நீ
மீட்டிடுவாய் என்று
நான் இல்லை ..
நான் இதில் மீண்டிடுவேன் என்ற நம்பிக்கையில்
நட பிணமாய் இன்றும்..!

ஆக்கம் – லண்டன் அக்கா

வன்னிமைந்தன் டிக் டாக்கில் வாசிக்க பட்ட கவிதை இது