Tag: திருமண நிகழ்வில்
திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமண விழாவின் விருந்து நடந்த நேரத்தில், உள்ளே நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஒட்டாவா பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணிby நிருபர் காவலன்
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்by நிருபர் காவலன்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்by நிருபர் காவலன்
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்by நிருபர் காவலன்
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்by நிருபர் காவலன்
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதல் இடம்பற்றுள்ளது .
தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது மணமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
மாப்பிள்ளையால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் ஹோட்டலின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
நீச்சல் குளத்தில், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்களுடனான வாக்குவாதம் அதிகமாகி, அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்து தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.












