Tag: தலிபான்கள்
தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை
தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் எட்டு ஐ எஸ் தீவிரவாதிகள் ,கொலை செய்யப்பட்டுள்ளனர் .
கொலை செய்யப் பட்ட எட்டு பேரும் ,தலிபான்கள் ஆட்சியின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தியவர்கள் என தெரிவித்துள்ளனர் .
கொட்டல் ,அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தூதரங்கங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதே நடத்த பட்ட தாக்குதலில் ,இந்த எட்டு பேரும் .கொலை செய்யப்பட்டதுடன் ,மேலும் பல கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு
பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு
இலங்கையில் பல்கலைக்கழங்கங்களில் உள்ள பிக்குகள் தாலிபான்களை போன்றவர்கள் என ,மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதான பீடாதிபதி வலஹகுணவெவ தம்மரதன தெரிவித்துள்ளார் .
இவரது இந்த பகிரங்க அறிவிப்பு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ,தாலிபான்களை இலங்கை அரச மகாநாயக்க சபையின் முக்கிய நபர் ,இவ்விதம் தெரிவித்துள்ள கருத்தியல் ,மதவாதத்தை இலங்கை பவுத்த பீடம் முன்னிலையாக நகர்த்துவதாக காட்டி நிற்கிறது .
தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான்கள் நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் கோட்டை, காபூல் பகுதியில் நடத்த பட்ட ,குண்டு தாக்குதலில் தலிபான்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தலிபான்களின் முக்கிய தளபதிகள் வாகன அணியை ,இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் ,முக்கிய தளபதிகள் தப்பித்து கொண்டனர் ,எனினும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியில் ,தொடராக நாள்தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .,
தலிபான்கள் தலைநகர் கோட்டையில், ஐ எஸ் தீவிரவாத குழுவை தூண்டி விட்டு, அவர்கள் மூலம் இந்த குண்டு தாக்குதல்களை, முன்னைய ஆட்சியினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த பழிவாங்கும் குண்டு தாக்குதல்களுக்கு ,அமெரிக்காவும் உடந்தையாக உள்ளது .
அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் உள்ள நிலையில் ,தாலிபான்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,அமெரிக்கா கங்கணம் கட்டி இவ்வாறான குண்டு வெடிப்பின் பின்புலத்தில் செயல் படுகிறது.
அதற்கமைவாக இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள்பிடியில் சிக்கினர்
50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள் பிடியில் சிக்கினர்
தலிபான்கள் ஆட்சியில் இடம்பிடித்து நகரும் ஆப்கானில் அதே தாலிபான்களுக்கு
எதிராக தாக்குதல் நடத்தி வந்த ஐம்பது ஐ எஸ் தீவிரவாதிகள் அதே அமைப்பிடம் சரண் அடைந்துள்ளனர்
இவ்வாறு சரண் அடைந்தவர்கள் படுகொலை செய்ய படாது அவர்களின் பாதுகாப்பில்
வைத்து கொள்ள படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு
வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை
தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்
நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்… பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
தலிபான்கள்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்
மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ராணுவ
பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த அக்டோபர் 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டது.
இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை
இதன்படி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான் படையினரை விடுதலை செய்வது உள்பட 6
அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றன. இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள்
என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மேலும், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
நாடகங்களில் பெண்கள் நடிக்க தடை – தலிபான்கள் புதிய அறிவிப்பு
நாடகங்களில் பெண்கள் நடிக்க தடை – தலிபான்கள் புதிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை: தலிபான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் பெண்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகையான ஆடை அணிய வேண்டும் என்கிற விவரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜதுல்லா முஜாதிதி கூறுகையில், “இதுப்போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை. தலிபான்களின் புதிய விதிமுறைகளில் சில விதிகள் நடைமுறையில் இல்லை. சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது
. இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைக்காட்சிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்” என்று அவர் கூறினார்.
தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்
தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்
ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 13 தொன் எடையுள்ள உணவுகளை
காவி சென்று தலிபான்கள் வசிக்கும் நாட்டில் மக்களுக்கு வழங்கியுள்ளது
முதல்தர அவசர உதவியாக இவை வழங்க பட்டுள்ளது ,மேற்படி நகர்வு முன்னைய
ஆட்சியாளர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்
13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்
தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ம் தேதி நுழைந்த தலிபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது சிறுமியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ
ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ
ஆப்கனிஸ்தான் நாட்டில் தலிபான் போராளிகள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
அரச இராணுவத்தினர் பாவித்து வந்த விமானங்கள் , உலங்குவானூர்திகள் டாங்கிகள் என முதல்தர ஆயுதங்களை மீட்ட அவர்கள் அதில் சிலவற்றை மக்கள் பாவனைக்கு காட்சி படுத்தினர்
தற்போது அந்த காட்சிகள் உலகளாவிய ரீதியில் வைரலாகி வருவதுடன் பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது



























