Tag: டெங்கு
யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு
யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1,602 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (390) நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் தற்போது 68,928 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.
எனவே, டெங்கு நோயின் பரவலைக் கருத்தில் கொண்டு 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அனர்த வலயங்களாக
பெயரிடப்பட்டுள்ளன என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Featured
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
எவ்வாறாயினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், நாட்டின் 67 வலயங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைய மழை காலத்துடன் இந்த அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டட நிர்மாணப் பகுதிகள்,
என்பனவற்றை உடனடியாகச்
சுத்தப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறக் கூடும் என்று அவர் சுட்டிக்கட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு மிகவும் அவசியமாக இருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்
யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்
யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்
யாழ் . மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.
குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்
டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்
மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம்,
கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை அடுத்தே இந்த
சமூக நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து 900
க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொது கட்டளைத் தளபதிகள், படைத்
தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு
ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள்இ டெங்கு ஒழிப்பு செயலணிஇ உத்தியோகத்தர்கள்இ பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்
வைத்தியசாலை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில்
உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது
,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே
குறிப்பிட தக்கது
டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை
டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை
கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை
முன்னெடுப்பதற்காக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு வசதியாக வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 891 பேர் பதிவாகியுள்ளனர். களுத்துறை
மாவட்டத்திலும் 572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது
இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோயானது அதிகமாக பரவி வருகிரது
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்றுப்புற சூழல் அசுத்தம் காரணமாகவே இந்த நோயானது பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு
டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6,389 ஆக உயந்துள்ளது
நிகழ் காலத்தில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்களையு இந்த கணக்கில் இலங்கை அரசு இனைத்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது
இவ்விதம் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களை டெங்கு நோயின் தாக்குதலில் இறந்தார்கள் என
சடலங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்
திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்
இலக்கை இரத்தினபாரிமாவட்டத்தில் கடந்த 90 நாட்களில் 89 பேர் டெங்கு நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இதனை தடுப்பதற்குரிய விழிப்புணர்வு கருத்தரங்ககுள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க பட்டு வருகிறது
சுற்று புறத்தை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாக இந்த நோயானது அதிகமாக பரவி
வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் , 05ஆம் , 06ஆம்
மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு
உட்படுத்தப்படவுள்ளதாகவும் , இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன்
பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.
இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole)
ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய
இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும்
அறிவிக்கப்ட்டுள்ளது.
கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக
முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி
இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-
பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.
அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.













