Tag: கொழும்பில் வர்த்தகர்
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது
by நிருபர் காவலன் - உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பெல்ட் அணியாவிட்டால் இனி கைது
by நிருபர் காவலன் - இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு
by நிருபர் காவலன் - பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்
by நிருபர் காவலன்







