Tag: கைது
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 648 காஸ் சிலிண்டருடன் மகன் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் வவுனியாவில் இன்று பதிவாகியுள்ளது.
தாய் நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விரைந்து சென்று வாகனத்தை மீட்டுள்ளதுடன், அதனை கடத்திச் சென்ற மகனையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
தாயுக்கும், மகனுக்கும் நீண்ட நாளாக இருந்த முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்
பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
ரஷ்யா சிறையில் வாடும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்,
ஜூன் 4 அன்று 47 வயதை எட்டிய அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாக,
நடந்த பேரணிகளில் ரஷ்யா முழுவதும் 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நவல்னிக்கு ஆதரவானவர்கள் ,நாம் உங்களுடன் இருக்கிறோம் ,நீங்கள் தனிமையில் இல்லை
என எழுத பட்ட வாசகங்களை அணிந்த படி, கூடிய அவரது ஆதரவாளர்கள்,
கைது செய்யப்பட்டு இழுத்து செல்ல பட்டனர் .
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக நவல்னி செயல்பட்டார் என குற்றம் சுமத்திய .
புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் ,விமானத்தில் பயணிக்கும் பொழுது ,
உணவில் நஞ்சு கலக்க பட்டு ஆபத்தான நிலையில் ,
இருந்து சுய நினைவு திரும்பிய பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
அவ்வாறான எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாகவே இந்த மக்கள் ,
அவரது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது கைது செய்யப் பட்டனர் என,
மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ,
அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில்
13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து
விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் 17.05.2023. புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றதோடு
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் சித்தப்பா பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த
தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் உள்ள அவரது
சித்தப்பாவின் வீட்டுக்கு குறித்த நபர் நேற்றைய தினம் வந்திருந்த போது, குறித்த வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும், விழுந்து உயிரிழந்தவர் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மும்மூர்த்தி ரஞ்சன் என பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபரை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு
கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் ஹட்டனில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை அரம்பித்துள்ளதோடு ஹட்டன் நிதீமன்ற பதில் நீதவான் நாராயணன் பாத்தீபன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
யாழ் முன்னாள்
யாழ் முன்னாள் முதல்வர் கைது
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
நேற்று அதிகாலையில் டிக்டொக் மூலம் இளைஞர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளமான TikTok இல் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு ஓட்டுவது என்பதைக் காட்டும் வீடியோவையும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.
வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது
ரிக்ரொக்கில் வன்முறை 8 பேர் கைது
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸை சார்ந்த பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது
வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது
குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் காரில் பயணித்த சந்தேக நபர் குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 72 இல் கடமையாற்றும் பெண் வைத்தியர் மற்றும் ஆண் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இச்சம்பவத்தின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். தையிட்டியில் இருவர் கைது
யாழ். தையிட்டியில் இருவர் கைது
யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது
6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது
வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கி இருந்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீடடில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது
புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது
கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கப்படுகின்றது.
வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது
வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது
அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான தகவலை வழங்கிய நபரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கமான 118க்கு தொடர்பு கொண்டு, அக்குரணையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.
தான் மாவனெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி செயற்பட்ட பொலிஸார் இராணுவத்தினரின் ஆதரவுடன் அக்குரணை நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 19ஆம் திகதி மற்றுமொரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தான் ஹல்துமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தகவல் வழங்கிய நபர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தகவல் வழங்கியவர்களின் இலக்கங்களைச் சரிபார்த்ததில், இரண்டு இலக்கங்களும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
மேலும், தகவல் அளித்தவர்கள் கொடுத்த முகவரிகளை சரிபார்த்தபோது, அந்த வீடுகளில் அப்படி யாரும் இல்லை என்பது உறுதியானது.
அதன்படி, தகவல் அளிக்கப்பட்ட கணினி அமைப்பின் தகவல்களை ஆய்வு செய்ததில், இந்த தகவல் ஒரே நபரால் அளிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
ஹாரிஸ்பத்துவ – பட்டுகொட பிரதேசத்தில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்து, ஹாரிஸ்பத்துவ – பட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த போது, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தத் தகவலை வழங்கிய நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இசதீன் மொஹமட் சஜித் என்ற சந்தேக நபர் மௌலவியாக பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது கைப்பேசியைள சரிபார்த்ததில் சம்பந்தப்பட்ட அழைப்புகள் வந்திருப்பது உறுதியானது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் போது, வேறொருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பிழையான தகவலை வழங்கிய நபர் கைது
பிழையான தகவலை வழங்கிய நபர் கைது
அக்குரன பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி இரவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அக்குறன நகரில் ஏதாவது நாசவேலைகள் இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன்படி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், பல விசேட பொலிஸ் குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட தகவல் தவறானது என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இரவு வேளையில் சுழியோடியமை மற்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த 12 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 03 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.
இதையடுத்து பொலிஸார் இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் மீதும் மோசடி, மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது
மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது
வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்




























