Tag: குடும்பஸ்தர் பலி
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக்குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (20) மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்by நிருபர் காவலன்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாதுby நிருபர் காவலன்
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவுby நிருபர் காவலன்
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்by நிருபர் காவலன்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழைby நிருபர் காவலன்












