Tag: கிளிநொச்சியில்
கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
வடக்கு மக்களுக்கான நீதி அமைச்சின் நடமாடும் சேவை திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளிநொச்சியில் நேற்று (01) நடைபெற்றது.
கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச வரவேற்கப்பட்டார்..
இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து அகதிகளாக சென்று, மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்
நீதியமைச்சினால் விசேட
நடமாடும் சேவை வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு
கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு
கிளிநொச்சியில் கவால்துறை நிலையம் ஒன்று புதிதாக திறக்க பட்டுள்ளது .
நேற்று கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ,இந்த காவல்துறை நிலையம் உத்தியோக பூரவமாக திறந்து வைக்க பட்டுள்ளது .
இலங்கை அரச படைகள் ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு மாகாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,மக்கள் சிவில் நிர்வாகத்தை மேம் படுத்தும் நோக்குடன் திறக்கப்பட்ட 61 வது காவல்துறை நிலையம் இது என்கிறது காவல்துறை .
கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு
மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் இந்த காவல்துறை நிலையங்கள் இயக்க படுகின்றன .,
வடக்கு பகுதியில் ஒவ்வொரு வீதியிலும் அல்லது ,ஒவ்வொரு கிரமத்தில் மூன்றுக்கு மேற்பட்ட உளவுத்துறையினர் இயக்க வைக்க படுகின்றனர் .
அந்த கிராமத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் மற்றும் ,தகவல்களை இந்த இரகசிய உளவு பிரிவினர் வழங்கி வருகின்றனர் .
இந்த உளவாளிகள் வேறு யாரும் அல்ல நம்ம தமிழர்கள் தான் என்கிறது விடயம் அறிந்த வட்டாரங்கள் .
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான
ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் .
உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.
தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது .
அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக தனிமை மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல்
உறவுகளுடனான முரண்பாடு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை துஷ்பிரயோகங்கள் மனநோய் பொருளாதார நெருக்கடிகளை கையாள தெரியாமை அதாவது எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது.
ஆனால் அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலைவாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.
கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் .
குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையினுடைய உளநல வைத்தியர் சிவதாஸ் மற்றும் சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர்
அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன
சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் அவர்களது மனநல
மருத்துவம் தொடர்பான நுல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கொவிட் காலத்தில் சேவையாற்றிய தாதியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் சுகந்தன் மாவட்ட பொது வைத்திய சாலையின் மனநல மருத்துவர் ம.
ஜெயராசா வைத்தியர்கள் தாதியர்கள்,
தாதிய உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது
சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்
கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில்
இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் வழங்கும் பணி இன்று ஆரம்பமானது.
பிரிவு உத்தியோகத்தர்கள் குறித்த தொகையினை வழங்கி வருகின்றனர்.
2020 ஆண்டு மே மாதத்தில் சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் தகுதியான 24040 குடும்பங்களுக்கான
கொடுப்பனவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன்
முறையீடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் 10564 பயனாளிகளுமாக 34604 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும்
29.05.2020 ஆம் திகதி வரை தொடரும் என கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்போ சந்திமுதல் கரடிபோக்கு சந்தி வரையான ஏ 9 வீதியிலும் வங்கிகள் பேருந்து
நிலையம் மற்றும் தரிப்பிடங்கள் வர்த்தக நிலையங்கள் நடை பாதைகள் மக்கள் கூடும் பகுதிகளிலும் தொற்று நீக்கும்
செயற்திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.24கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த
குணரட்ணவின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி சில்வாவின்
வழி நடத்தலில் காலாற்படையினரால் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொது
சுகாதார பிரிவினரின் கண்காணிப்பில் தொற்று நீக்கம் கலவைகள் விசிறப்பட்டதுடன் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 















