Tag: உதயநிதி ஸ்டாலின்
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி
சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம்
மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.
இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில்,
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர்.
நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த
நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் வின்னர்
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் வின்னர்
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ்
தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறதாம்.
ஆரவ்
இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் முதல்
சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரவ், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ராஜபீமா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






