Tag: அரச சேவை
அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு
அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு
அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு இன்று தற்பொழுது இலங்கையில் நாடளாவிய ரீதியில் 200 அரச சபை அமைப்புகள் தமது தொழில் சங்க புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவித்துள்ளன .
நாடளாவிய நிலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ,இந்த வேலை புறக்கணிப்பால் ,அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து ,அதனூடாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையாக இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம்
இந்த 200 அரச சபை நிறுவனங்களும் அரசு சபை சங்கங்களும் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம் தெரிவிக்கப்படுகிறது
ஆளும் அரசு தற்பொழுது தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், இருநூறு அரசவைச் சங்கங்கள் தற்பொழுது பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஆட்சியாளருக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டங்களை கலப்பதற்காக போலீசார் வழிந்து திணிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன .
நேரம் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் இது போன்ற போராட்டங்களை தாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் வெடித்த மக்கள் போர்
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு சலுகைகளையும் ஆசை வார்த்தைகளையும் காண்பித்து அதன் ஊடாக வாக்குகளை சுரண்டி ஏப்பம் விட்டு வந்த அரசியல் கட்சிகளுக்கு தற்பொழுது தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் .
வீதி இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது மிகப்பெரும் நெருக்கடியையும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

அரச சேவையில் சம்பள முரண்பாடுகள்
அரச சேவையில் சம்பள முரண்பாடுகள்
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடு
அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.#
தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழு
இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும்
என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்
ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இந்த மாற்றங்கள் அதிரடியாக நிகழ்கின்றன














