இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
Posted in இலங்கை செய்திகள்

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள்

50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.

ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.

“இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.

இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.

நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்