Tag: epdp
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும்
அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது
ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம்,
பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக
பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.
கொலையாளி மனித உரிமை ஆணையாளராக நியமித்த கோட்டா
கொலையாளிகளை மனித உரிமை விசாரணை குழு தலைவராக நியமித்த கெட்ட பயல் கோட்டபாயா
இலங்கையில் தமிழர் அரசியல் ரீதியாக தோற்கடிக்க பட்டும் ,இராணுவ
ரீதியில் செயல் இழந்து போவதற்கு காட்டி கொடுப்பும் மற்றும் தேச துரோகங்களை புரிந்த இடியின் கட்சி முக்கிய பெண்மணி
லோகேஸ்வரி பற்குணராஜா
மைதா உரிமை மீறல் விசாரணை குழுவின் தலைவராகநியமிக்க பட்டுள்ளார்
இவர்கள் நடத்திய கடத்தல் ,கப்பம்,கொலை ,கொள்ளை
என்பனவற்றை யார் விசாரிப்பது என்பது இன்று தமிழர் தேசம் வைக்கும் கேள்வியாகிறது
தாம் சர்வதேச நீதி மன்றில் இருந்து தன்னை கடத்தி தப்பிவிடலாம் என அரசு எண்ணுவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது







