Tag: மோதிவிபத்து
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம் மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும்,
சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை
விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மொனராகலை வைத்தியசாலை
காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து ,சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை
உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்தின் சாரதி கைது
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – தம்வெல்மிட்டிய வீதியில் லஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரிகள் மீது மோதிய விபத்தில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது











