Tag: மனோ கணேசன்
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது
- மனோ கணேசன்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு
மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,
அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.
அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.
இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.
இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”
“அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்
கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,
விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்
உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.
13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.
ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.
13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,
சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக
கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்
கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்-மனோ கணேசன்
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன
ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.
“கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
“கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த
உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும்
தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.
எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில்
திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம்,
ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது
தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது
- கூட்டணி தலைவர் மனோ கணேசன்
பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் - கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை
திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம்.
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்; இதுவும் வெளிநாட்டு அழுத்தத்தின் பலாபலன்
- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.
அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது
என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.
ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.
ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.
எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக்கொண்டுள்ளேன்.
1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.
ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.
“உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்
ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்
ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்
ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது. எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்.
ஹிஷாலினி பற்றி கூப்பாடு போடும் டிலான் பெரேரா இதை அறிய வேண்டும் என்கிறார் மனோ கணேசன்
மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய்
பேசும் ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி
அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?
சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்
நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத
நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.
இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்
போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த
அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.
சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச
வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின்
மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.
சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்
நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத
நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது.
இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்
போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.
ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி
முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?
நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள் தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?
ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம், என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு
வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.
இதுவே இன்று சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம்.
வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா
துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.
ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த
அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.
13தி, 16தி, தோட்ட வீடமைப்பு, சம்பளம், சீனா ஆகியவை பற்றி தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு
13தி, 16தி, தோட்ட வீடமைப்பு, சம்பளம், சீனா ஆகியவை பற்றி தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு
தமுகூ தலைவர் மனோ கணேசன்
13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, பொது செயலாளர்சந்திரா சாப்டர்
ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.
இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ம் திருத்தம், 16ம் திருத்தம் என்பவை ஆகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது. 13ம் திருத்தம் மூலம்
உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்து விட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்ட விரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.
16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.
ஆகவே 13ஐ பற்றி பேசும் போது, இந்திய அரசு 16 பற்றும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு
பறித்துக்கொண்டு கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனரகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.
அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும்
இந்திய அரசுக்கும், புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.
அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட்சமபலம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழு முழுக்க தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. இதுவே
ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டு கொள்வது இல்லை.
அப்படியானால், இந்த மக்கள் வேறு நட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.
இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியிரை சந்திக்க விரும்புகிறது, இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை
ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவேதான், இலங்கையில் சீனா
நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்.
இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்-மனோ
இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்
-மனோ கணேசன்
இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை,
பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என தமிழ் முற்போக்கு
கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.
தனது டுவீடர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ எம்பி இதுபற்றி மேலும் கூரியுள்ளதாவது,
உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.
இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை
இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான “இல்லை”களின் உண்மை.
கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.
இப்போது இந்நாடு, இலங்கை தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது என தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.
இன்று இந்நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950 களில், இந்நாட்டின் வெளிநாட்டு செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு
அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்க கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கிறோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்தமைதான்.
தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா வியட்னாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.
நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டி பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாக கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?
இப்போது தென்னாசியாவை பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972ல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்தி போகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
இன முரண்பாடுகள், யுத்தம், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு செலவாணி பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகிறேன் என்று
சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த
உங்களது போலி தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்
நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்
அரசாங்கத்துக்கு மனோ கணேசன்
நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி
தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர்
மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு
கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று,
நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த
அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?
ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று
கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.
இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன
? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான்
தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.
இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் செத்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.
நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.
அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி வரி
குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூ. 1600கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்கலாம்?
நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா
அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.
கோதாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது. பிரதமர் மோ
டி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய-இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற
மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு
பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது. இறப்பும் கூடி விட்டது.
அதுபோல் நம்ம ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோதாபய
ராஜபக்ச, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையின் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!-மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!
உயர்தர மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது. ஆகவே சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக
வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். வானம் பரந்து, விரிந்து, திறந்திருக்கின்றது.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே,
சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள்.
தமிழ புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் வாழ்த்தி வரவேற்போம்-மனோ கணேசன்
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
தமிழகத்தின் ஆளும் கட்சியாக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தையும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள தளபதி மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம்
என்று கூறியுள்ள, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ள டுவீட்டர் செய்தியில், “திமுக கூட்டணியை வழிநடத்தி
நீங்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றி உலகத்தமிழர்களின் பார்வையை உங்கள் மீது திருப்பியுள்ள நிலையில், எம் தந்தையர் நாடு தமிழகத்தின் முதல்வராக பொறுப்புகளை ஏற்கும் உங்களை
இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மனமாற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.
அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன்
உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.
தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது
உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல.
அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல. ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம்.
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்-மனோ கணேசன்
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு,
எதிர்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கிறது.
இவை தொடர்பில் ஆராய நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என தமிழ் முற்போக்கு
கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்.
நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்”
தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜக போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ
கூடாது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அவரது கைதை, அவர் கைது செய்யப்பட்ட முறைமையை நமது கட்சி கண்டிக்கின்றது.
கைது அச்சுறுத்தல் எனக்கு புதிதல்ல. இதைவிட மிக பயங்கரமான 2007ம் ஆண்டு, இன்றைய ஜனாதிபதி பலமிக்க பாதுகாப்பு செயலாளாராக பணியாற்றியபோது, கோர யுத்தம் வடகிழக்கில் நடக்கிறது.
அப்போது, எனது தொகுதி கொழும்பில் அடைக்கலம் புகுந்த வடகிழக்கு தமிழர்கள் வகைதொகை இல்லாமல் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புறநகர் பகுதிகளில்
வீசப்பட்டிருந்த வேளை, அந்த அரச பயங்கரவாத அராஜகத்துக்கு எதிராக தெருவில் இறங்கி போராடினேன் என்பதற்காக, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து, கொடுமையாக விசாரித்து, பயமுறுத்தினார்கள்.
அப்போது எனக்கு ஆதரவாக எந்த ஒரு தமிழ், முஸ்லிம் எம்பீயும் வாயை திறக்கவில்லை. அரசுடன்
சேர்ந்து பலர் அமைதி காத்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எம்பீகள் அல்லாத சில சிங்கள முற்போக்காளர்கள் மட்டுமே எனக்காக குரல் கொடுத்தார்கள்.
ஆனால், அந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு இன்று எனது நிலைபாடுகளை நான் தீர்மானிக்க முடியாது. அந்தளவு “சிறுமனதாளன்” அல்ல, நான்.
இப்போது, பகிரங்கமாக கொழும்பில் குடும்பத்துடன் வாழும் ரிசாத் பதுர்தீன் எம்பீயை, அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டை சுற்றி வளைத்து, ஒரு பாதாள உலக கேடியை இழுத்து
செய்வதை போல் கொண்டு சென்றதன் மூலம் இந்த அரசு எமக்கு சொல்கின்ற செய்தி என்ன?
“தன் மீது குற்றம் சாட்ட சாட்சியங்கள் இருந்தால், தன்னை விசாரியுங்கள்” என அவரே பலமுறை கூறியுள்ளார். ஆனால், எதிர்கட்சியில் இருக்கும்போது, தினசரி வரிசையாக வந்து, அவர் மீது
சீஐடியில் புகார் செய்து விட்டு, பின் ஊடகங்களில் வசை பாடி விட்டு, சாட்சியங்கள் இருப்பதாக கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை தூக்கில் போடுவோம் எனவும் கூவி
விட்டு, ஆளும்கட்சியாக மாறிய பின், சுமார் இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு, இப்போது நௌபர் மௌலவி என்பவரே சூத்திரதாரி எனவும் அறிவித்து விட்டு, இப்போது ரிஷாடை இந்த அரசு கைது செய்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நௌபர் மௌலவியை “சூத்திரதாரியாக” ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க இவரை இந்த அரசு கைது செய்கிறது என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல்தான், நண்பர்கள் ஹரின், மனுஷ ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. நாளை இது இன்னும் மேலும் பலரையும் சுற்றி வளைக்கும். ஆகவே நாம் இந்த பின்னணியை புரிந்துக்கொள்ள வேண்டும்.
ரிசாத் கைது பற்றி, சனிக்கிழமை காலையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் பேசினேன். தற்போது நாளை ஐக்கிய மக்கள் சக்தியின்
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என நம்புகிறேன்.
தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்-மனோ கணேசன்
பெளத்த அமைப்புகளுக்கு அரசு தடை எனக்கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.
இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன்.
ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.
தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.
தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.
ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள்
கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.
அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.
இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.
இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்
உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன்
உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை
தமுகூ தலைவர் மனோ கணேசன்
உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.
2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள்
இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக
ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.
அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.
நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின்
மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.
ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.
பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது- மனோ கணேசன்
பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது
- ஆனந்தா கல்லூரி பழைய மாணவர்களிடம் மனோ கணேசன் எம்பி
இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை
இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது,
ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.
இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில்
நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.
ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.
தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது.
மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.
அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள்
நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.
அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள
அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.
இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும்.
அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.
மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள
அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன்.
நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-மனோ
தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு நடத்தும் நிலையங்களுக்கோ அல்லது சொந்த நிதியை
செலுத்த சொல்லி ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளுக்கோ அனுப்பப்படக்கூடாது. இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்று பாராளுமன்றத்தில் அவர் என்னிடம் தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடு சென்றுள்ள இலங்கையர், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் எனில், அவர்கள் இன்று தாய் நாடு திரும்பும் போது, அவர்களை தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைக்கு உள்ளாக்க வேண்டும்.
ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் விமான பயணசீட்டு கட்டணம் ஆகியவவை தொடர்பில் பெரும் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுபோல், அரசு நடத்தும் நிலையங்களில் நாட்கள் தங்க வைக்கப்படும் நாடு திரும்பும் இலங்கையர்களும், அங்கே முறையாக கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.
இவற்றால், வெளிநாடுகள் சென்று உழைத்து அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்று தந்து, இன்று தொழில் இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களில் மாட்டி இருக்கும் நம் நாட்டு மக்கள் பெரும் அவதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
நோயுற்றவர்கள் உடனடியாக வைத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், கண்காணிப்பின் கீழ் சுய தனிமைக்கு உள்ளாகப்பட வேண்டும். உலகின்பல நாடுகளில் இந்த முறை இப்போது அமுலுக்கு வந்துள்ளது.
எனது இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இதுபற்றி, இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் நேற்று பாராளுமன்றத்தில் என்னிடம் தெரிவித்தார்
எது எப்படி இருந்தாலும், நம் நாட்டு அப்பாவி மக்களின் நிர்க்கதி நிலைமையை பயன்படுத்தி பணம் பண்ணும் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்கும் முறையில் அரசின் சட்ட திட்ட விதி முறைகள் ஒருபோதும் அமைய கூடாது.
சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்
சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்
சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்”
சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.
விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.
இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.
இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.
சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை
போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.
அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ கணேசன்
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்
தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை
பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக
போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,
சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல் நடைமுறையில், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்”
என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம்
ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று
வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த
அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்த இலங்கை திருநாடு, “பன்மொழி, பன்மத, பல்லின” அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை
ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
இதுவே ராஜபக்ச ஆட்சியின் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.
இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்
.
ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்-மனோ கணேசன்
ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்
-மனோ கணேசன்
ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று
அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர,
இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என கொழும்பு மாவட்ட எம்பியும்,
ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” (இயஸ் சேர்) என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை.
நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி ட்ரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன. இன்று
“ஜனாதிபதி சேர்” தோற்றுபோய் அவமானப்பட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.
அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, இலங்கையின் பல பேரினவாத “அறிவாளிகள்”
அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர். அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட
முற்பட்டனர். உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர்.
இன்று இவர்களுக்கு, நெற்றியில் செருப்பால் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது. நிறைவேற்று
அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர
, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகள் தொடர்பான எங்களது கருத்து முரண்பாடுகள் அப்படியே இருக்க,
அமெரிக்காவின் இந்த உள்நாட்டு ஜனநாயக வெற்றியை நாம் பாராட்டுகிறோம்.
இப்போது இந்த இடைக்காலத்தில், அமெரிக்காவை விமர்சித்த இலங்கை இனவாத வீரர்களை தேடுகிறோம். காணவில்லை.
வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?-மனோ கணேசன்
வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?
-மனோ கணேசன்
யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.
யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.
வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.
இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.
எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?
இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.
அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.
அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில்
உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.
ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.
தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று,
முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,
இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம்.
நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?
ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு
பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்
நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்
1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த
தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோத்தா அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர்
மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக
சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மனோ கணேச எம்பி வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;
தொகுப்பாளர்:
நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது என
கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?
மனோ கணேசன்:
நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது.
நான் சொல்ல முயல்வது இதுதான். அதாவது இந்த நாட்டில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் பிரச்சினை, வடகிற்கும், தெற்கிற்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.
பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட்டங்களை மேற்கொள்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என கூறப்படுகிறார்கள். இதுபற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான்.
நாம் இப்படி பார்க்கின்ற போது, 1971, 1989 ம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய JVPயினர் பயங்கரவாதிகள். LTTEயினரும் பயங்கரவாதிகள். மற்றும் இன்று அமைச்சு பதவி வகிக்கும் டக்லஸ் தேவானந்தவின் EPDP, PLOT, TELO ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.
ஆனால் இப்போதுள்ள கேள்வி, JVP இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் LTTE யிற்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, LTTEயின் பெயரை பயன்படுத்தி நினைவு கூறுவது சட்ட விரோதமானது என அரசாங்கமாக இருக்கட்டும், அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் இதனை ஒரு காரணமாக கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.
தொகுப்பாளர்:
ஆனால் பிரபல நாடுகளில், அதாவது யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?
மனோ கணேசன்: (உடனடியாக இடைமறித்து..)
அப்போது எவ்வாறு தெற்கில் JVP நினைவு கூருகின்றது?
தொகுப்பாளர்:
JVPக்கு நினைவு கூர இடமளிக்கப்படுகின்றதா?
மனோ கணேசன்:
நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை, உங்களுக்கு தெரியாதா?
1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர்.
தொகுப்பாளர்:
ஆம். ஆம். JVPயினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர்தாம்.
மனோ கணேசன்:
இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, போஸ்டர்களை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவுக்கூறுகின்றனர்
தொகுப்பாளர்:
அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்கு LTTE தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?
மனோ கனேசன்:
நான் JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுகொள்பவனல்ல. நான் இந்நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்ல.
பேச்சுவார்தை. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கலந்துரையாடல், கலந்துரையாடல். வேறு வழிமுறைகள் இல்லை.
அப்போது நான் எப்படி JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே! ஆயுத போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்து கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!
அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
அது எங்களுக்கு இல்லை. ஆனால், அது JVPக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றே ஒன்று, JVPயின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலர், ஜேவிபியினர் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள், ஆனால், LTTE பயங்ரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.
அதை நான் ஏற்க மாட்டேன். இதை தாங்கள் தேவைகளுக்காக சொல்லுகின்றனர். அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.
தொகுப்பாளர்:
அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?
மனோ கணேசன்:
ஒன்றாகும்! ஒன்றாகும்!
ஆயுத போராட்டம் என்பது, ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்வேண்டி ஆகும். புலிகளின் நோக்கம் வடகிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கிறார்கள்.
1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை JVP பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்கு தெரியுமாயிருக்க வேண்டும். அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்த கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும்தானே!
LTTE மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கை மட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர். ஜேவிபினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர்.
LTTE மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், JVPக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், அதை காரணமாக கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள். JVPயினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்.
எல்லோருமே ஆயுதங்களை ஏந்திதான் போராட்டங்களை செய்தனர். அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன்.
ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுகொள்வதும் இல்லை, அதை சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.
ஆனால் அவர்கள் உயிரிழந்தனர்.
அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவர்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும். இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை.
அதனால் LTTE ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால்…, அந்த தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும், அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளை பற்றி பேசாமல், இறந்தோரை நினைவுக்கூர அவர்களுக்கு இடமளிக்கபட வேண்டும்.
தொகுப்பாளர்:
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லையே. அவர்கள் படங்களை பிரசுரிக்கின்றனர்?
மனோ கணேசன்:
அதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மற்றும் தெற்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் சம்பூரணமாக நினைவுகூரவே கூடாது என்று கூறுகிறார்கள்.
இங்கே LTTE போராளிகள் மட்டுமல்ல, சதாரண மக்களும் யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், அவர்களை எவ்வாறு நினைவு கூறுவது? அதற்கு இடமளிக்க வேண்டும் அல்லவா?
ஜேவிபியினருக்கு நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளதே. இங்கே கொழும்பில், எம் தலைநகரத்தில் பாருங்கள். இம்மாதம் பாருங்கள். அவர்கள் நினைவு கூருவார்கள்.
இதற்கு ஒரு கலந்துரையாடல் அவசியம். என்னுடைய டுவீட்டர் செய்தி மூலம் இதுபற்றிய ஒரு தேசிய கலந்துரையாடலையே நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு தேசிய விவாதத்தையே எதிர்பார்க்கின்றேன்.
சிலர் என்னிடம் வந்து, LTTE வேறு, JVP வேறு என்று சொல்லுகின்றனர் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை பற்றி நான் கதைக்க போவதில்லை. அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா? “லெஜிடிமேட் கவர்ன்மன்ட் ஒப் ஸ்ரீலங்கா”, சட்டபூர்வமான இலங்கை அரசாங்கம், என்பதற்கு எதிராக அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா?
இப்போது இந்நாட்டில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கு உரிமை உள்ளது? காவல்துறைக்கும், இராணுவத்திற்கும்தான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது.
எனக்கும் மந்திரி என்பதால் அனுமதி பெற்ற பிஸ்டல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனக்கு அந்த அவசியம் இல்லை. ஆகவே என்னிடம் துப்பாக்கி இப்போது இல்லை. மற்றவர்களுக்கும் அதை வைத்திருக்க முடியும் ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை.
தவிர, அமைப்புரீதியாக யாருக்கும் ஆயுத போராட்டம் நடத்த முடியுமா? ஆயுதங்கள் சேகரிக்க முடியுமா? அதைதான், அதை மட்டும்தான் நான் பார்க்கின்றேன் இவர்களின் கொள்கைகளை நான் பார்க்கவில்லை. யுத்தத்தினை இருசாராரும்தானே செய்தார்கள்? நாம் இவர்களுக்கு இடமளிக்கின்றோம். அவர்களுக்கு இடமில்லை. அப்படியானால், தமிழ் மக்களின் மனம் புண்படுமல்லவா?
இப்போது பாருங்கள். தெற்கிலுள்ள தாய், தந்தையர்களுக்கு மற்றும் மக்களுக்கு தங்களுடைய உயிரிழந்த புத்திரர்களை நினைவுகூர உரிமை உண்டு. இந்த புத்திரர்களில் பெரும்பாலோர் JVP போராளிகள். தேசபிரேமி போராளிகள். அவர்கள் இந்நாட்டில் என்ன செய்தார்கள்?
ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொன்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்களை கொன்றார்கள். அரசியல்வாதிகளை கொன்றார்கள். ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.
நடந்ததுதானே? இல்லை என சொல்ல முடியுமா? 1971,1989ம் ஆண்டுகளில் நடந்ததா? இல்லையா? சொல்லுங்கள். இல்லையென கூற முடியுமா? இப்போது அந்த வழியை கைவிட்டு, மனம் மாறி, பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். நல்லது மற்றும் அழகானது.
தொகுப்பாளர்:
கருணா அம்மானும் வந்திருக்கின்றார்.
மனோ கணேசன்:
EPDPயினர் வந்திருக்கின்றனர். PLOT தலைவர் சித்தார்த்தன் வந்திருக்கின்றார். TELO அமைப்பின், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை பாராளுமன்றத்தில், குழுக்களின் பிரதி தலைவராக இருந்திருக்கின்றார். இன்னமும் புதிதாக பலர் பாராளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் PLOT, EPDP, TELO, EPRLF அமைப்புகளில் இருந்தவர்கள். அவர்களும் ஆயுத போராட்டம் மேற்கொண்டவர்கள். அதேபோல LTTEகாரர்களும் வரலாம். ஏன், கருணா வந்து போனார். இப்போது பிள்ளையான் வந்திருக்கின்றார்.
தொகுப்பாளர்:
உங்கள் வாதம் தர்க்கரீதியாக சரி. ஆனால், நாங்கள் இரண்டையும் நிறுத்து பார்தோமானால், LTTEயின் ஆயுத போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். அதனால் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட சேதம் அதிகம் அல்லவா? அதை நீங்கள் ஏற்றுகொள்ளுகின்றீரகளா?
மனோ கணேசன்:
இல்லையில்லை. யுத்தம் நடக்கும் போது… JVPயின் காலத்தில் தொழிநுட்பங்கள் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் சாதாரண காட்டுத்துப்பாக்கிகளை பாவித்தனர். பின்னர் 1989ல் அவர்களும் முன்னேறி இயந்திர துப்பாக்கிகளையும் பாவித்தனர். இப்போது அல்லது எதிர்காலத்தில் இன்னொரு யுத்தம் வந்தால் அவர்கள் இன்னமும் முன்னேறுவார்கள்.
ஆயுத போராட்டம் நடந்தால், யுத்தம் நடந்தால் சேதம் ஏற்படத்தானே செய்யும். நான் அதை ஏற்றுக்கொள்பவன் அல்லவே. எனக்கு அது வேண்டாமே! நான் கதைப்பது அதையல்லவே.
அங்கு சேதம் அதிகம். ஆகவே அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இங்கு சேதம் குறைவு. அதனால் இங்கே இடமளிப்போம். இந்த தர்க்கம் பிழையானது. இது ஒரு பாரபட்சமான தர்க்கம். அப்படி செய்ய முடியாது. ஏன் தெற்கிற்கு மட்டும் ஒரு நீதி?
இப்போ பாருங்கள். இந்த அரசாங்க காலத்தில்தான் அதிகம் சொல்லப்படுகின்றது. “ஒரே நாடு: ஒரே சட்டம்” எனப்படுகிறது.
ஒரே நாடு, என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு யாரும் அதுபற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை. நான் சொல்கிறேன். இது ஒரே நாடுதான். அதற்குள் வேறொறு நாட்டை உருவாக்க முடியாது.
இது ஒரு நாடாகவும் இருக்க வேண்டும். அரசியல் இலக்குகளை அடைய ஆயுத வழியற்ற பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை என் பிரதான இரண்டு நோக்கங்கள். ஒன்று, இது ஒரே நாடு. இரண்டாவது, அரசியல் நோக்குகளை அடைய ஜனநாயகமற்ற பாதையில் செல்லாமல் இருப்பது. இது இரண்டும் எனது அடிப்படை. அதற்குள்ளேதான், நான் எல்லாவற்றையும் அளந்து, நிறுத்து பார்க்கின்றேன்.
அதற்குள் எல்லாமே வருகிறதுதானே? “ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்று இந்த அரசாங்கம்தானே சொல்கின்றது? ஒரே சட்டத்தை கொண்டுவர முடியுமோ என எனக்கு தெரியவில்லை. அதற்கு வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன.
கண்டியில் “மலைநாட்டு சிங்கள சட்டம்” உள்ளது. வடக்கில் “தேசவழமை சட்டம்” இருக்கின்றது. “முஸ்லிம் சட்டம்” இருக்கின்றது. இவற்றையெல்லாம் கலந்துரையாடி ஓரிடத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்படியென்றால் நல்லது. அப்படி ஒரே சட்டம் கொண்டு வரும் போது, அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.
நான் சொல்வது அதனையல்ல. இப்படி சொல்லும் அரசாங்கம், இப்போது பாருங்கள், வடக்கிற்கும், கிழக்கிற்கும் வேறு சட்டத்தை அமுல் செய்வது போல் தெரிகிறதே. அங்கே நினைவுக்கூர முடியாது. தெற்கில் நினைவுக்கூர முடியும்.
அப்போது அது வேறொரு நாடா? வேறு நாடு இல்லை என நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் இதன் முலமாக வெவ்வேறு நாடுகள் என அரசாங்கம் சொல்லுகின்றது.
நாங்கள் இதை மனிதாபிமான கோணத்தில், மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு நினைவுகூர இடமளிப்பது, அவர்களுடைய கொள்கைகளை அப்படியே ஏற்கின்றோம் என்பதல்ல.
சரி…, எனக்கு சொல்லுங்களேன். LTTE இப்போது எங்கு இருக்கின்றது?
2009 மே மாதம் 19 தினம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என உத்தியோகபூர்வமாக அக்காலத்தில் ஜனாதிபதி இப்போது பிரதமராக இருக்கின்றவர் பாராளுமன்றம் வந்து அறிவித்தார். அந்நேரத்தில் LTTE முற்றாக அழிக்கப்பட்டது எனவும், யுத்தத்தில் வெற்றி பெற்றோம் எனவும் தெரிவித்தார்கள்.
இப்போது சில இடங்களில், சில நேரங்களில், LTTE கொடிகளை ஏந்தி, சிலர் வெளிநாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு, அதை ஒரு பயங்கர பூதமாக காட்டி, காலம்பூராவும் சாதாரண தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முடியாது. இப்போது LTTE இல்லை.
மற்றபடி, வட-கிழக்கு மக்களின் இன்றைய மனப்பான்மையை நான் நன்கறிவேன். அவர்கள் இன்னுமொரு பயங்கர யுத்தத்திற்கு தயார் இல்லை. இப்பொழுது யாராவது ஆயுத போராட்டத்தை பற்றி பேசினால், பொலிஸ், ராணுவத்துக்கு முன், வட-கிழக்கு தமிழ் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.
ஆகவே இந்த பின்னணியில்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டு














