Tag: போக்குவரத்து
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை
மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை
இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் தற்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது
- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- இலங்கை சீனா பேச்சு
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
இந்த நிலையில், நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை (14) தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (15) ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது.
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது
- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்
- இலங்கை சீனா பேச்சு
- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,இதன்படி மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரெயில் சேவை ஆரம்பிக்ககூடியதாக இருக்கும் என்றார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
























