Tag: பிரதேசசபை
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school
இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டன் பிரேதசசபை
இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்

- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்

- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி

- ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

- டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு ,வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என
மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி
தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க்
காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.
இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.
பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.
இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின்
சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்












