மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்

அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றமே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிக்கு பிணை வழங்கியது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை

நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு தலா 50 லட்சம் ரூபா சரீர பிணை இரண்டு மற்றும் 50,000 ரூபா ரொக்கப் பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்தே அவர் செய்யப்பட்டார்.

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

இந்நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07) மாலை 5.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதித்தது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் அவரது கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களால் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

No posts found.