Tag: நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
Author: நிருபர் காவலன் Published Date: 04/01/2022 Leave a Comment on நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!
நாளை ஒரு நாள் மீள வருவோம்
நம்பும் தமிழர் ஈழம் தருவோம்
நாடு பிடித்தே நாமும் ஆள்வோம்
நம்பு தமிழா நாங்கள் வெல்வோம்
எங்கும் செல்வோம் எதிலும் வெடிப்போம்
எங்கள் இலக்கு எதுவோ அடைவோம்
தூரம் எமக்கு துயரே இல்லை
துணிந்து விட்டால் துளி அச்சமில்லை
ஆண்டு நூறு கடந்து போகும்
அதிலே துன்பம் மறைந்து போகும்
எழுந்து விட்டால் எழுச்சி பொங்கும்
எழுந்தே உலகு எம்மை வணங்கும்
நீதி நேர்மை இங்கு இல்ல
நீர்த்து போனால் ஏதும் இல்ல
அழுகை நிறுத்தி எழ வேண்டும்
அரண்கள் அமைத்தே பறக்க வேண்டும்
உன்னில் உனக்கு இறக்கை கட்டு
உயர ஏறி வானில் முட்டு
வையம் வந்து வாசல் தட்டும்
வாழ ஈழம் தந்து போகும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 04-01-2022






