Tag: தேம்ஸ் நதி
உன் பதில் என்ன
உன் பதில் என்ன
புத்தியில நீ இருந்து – உன்
புன் முகத்தை காட்டையில
நெத்தி வேர்வை கலையுதடி – உன்
நேர் விழியால் மங்குதடி
தாகத்தில நீ தவிக்க
தண்ணீர் இனிக்குதடி
தாமரையே செவ்விதழ்
தரை புரண்டு வெடிக்குதடி
தாலிபான் போர் போல
தடை உடைத்து வென்றவேளே
நீ இருக்க என் கவலை
நினைவே ஏறு தோள் மேலே
இறக்கும் முன்னர் எனை வந்து
என் உயிரே பார்த்து விடு
இறக்கும் முன்னர் என் ஏக்கம்
இன்றே தனித்து விடு
உன் பதில் என்ன
உன் மடியை ஒரு நிமிடம்
உறங்க கொஞ்சம் தந்து விடு
உயிர் விட்டு சென்றிடுவேன்
உயிரே வாழ்ந்து விடு
ஊர் கதையை காதில் விட்டால்
உயிரே வாழ மாட்டாய்
உனக்கான சாலை இட்டால்
உயிரே நீ வாழ்ந்திடுவாய்
நானிருக்கும் காலமதில்
நாம் வாழ வேண்டுமடி
நம்பிக்கை நட்டவளே
நலமுடன் பதிலிடுவாய் ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
நீ வேண்டும் எனக்கு
நீ வேண்டும் எனக்கு
தேம்ஸ் நதியின் ஓரத்திலே
தெரு விளக்காய் எரிபவளே
நயாகரா அருவியாக
நான் ஓடி வந்திடவா ..?
கூலி இன்றி ஆறு வெட்டி
குரல் எழுப்பி ஆடி வரும்
அழகான நதி போல
அன்பே நான் வந்திட வா …?
உள்ளிருந்து துள்ளி வரும்
உருவத்தில் சிறிதான
மீன் போல நான் வரவா
மின்னல் போல் ஒளி தரவா ..?
குமரியில பூவெய்தி
குலை குலையாய் காய் காய்த்து
பழமாய் உதிர்கின்ற
பருவத்தில் வந்திட வா …?
எதுவாக நான் வரவோ
என் அன்பே பதில் தர வா
ஏங்கும் மனதொன்றின்
ஏக்கத்தை தனித்திட வா …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-08-2021
உலக புகழ் பெற்ற
தேம்ஸ் நதி (லண்டன்
நயாகரா ( கனடா )
http://ethirinews.com/






