Posted in இலங்கை செய்திகள்

வீட்டுக்கு வீடு தென்னங்கன்று வழங்கும்

வீட்டுக்கு வீடு தென்னங்கன்று வழங்கும்

நாடெங்கும் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் வீட்டுக்கு வீடு தென்னை மரம் வழங்கும் ‘தொரின் தொரட்ட கப்ருக’ தேசிய வேலைத்திட்டத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில் பின்தங்கிய

கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை

மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் அன்மையில் மட்டகளப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது 250 பேருக்கு தலா இரண்டு தென்னங்;கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட தென்னை

பயிற்செய்கை சபையின் உதவிப்பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன் என பலரின் பங்கேற்பில் மட்டகளப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.