Tag: குத்திக்கொலை
பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை
பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை
பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ்
லண்டன்:
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (வயது 69) இன்று எஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த எம்பி அமெஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் எம்பிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட எம்பி சர் டேவிட்டுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் கூறி உள்ளனர்.
சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை
சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை
ஆந்திர மாநில குண்டூர் மாவட்டம் சத்தனப்பள்ளி நாகார்ஜூனா நகரை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது30). இவருக்கும் இவரது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதிக்கும் (43) சொத்து தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு அவ்வப்போது சென்று தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சொத்து பிரச்னை பற்றி பேசலாம் என்று கூறி வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு சென்ற சீனிவாசராவ் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த சீனிவாசராவ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து வெங்கடசுகுணா பத்மாவதி, அவரது மகள் லட்சுமி(23) ஆகியோரை குத்தி கொலை செய்தார்.
சீனிவாசராவிடம் இருந்து தப்புவதற்காக அவர்கள் 2 பேரும் போராடினர். ஆனாலும் பலனில்லாமல் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சீனிவாசராவ் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அங்கு வசிக்கும் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.






