Tag: வெப்பம்
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம் ,நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியுள்ளதாவது,
தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடும்.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும்.
மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வெப்பசுட்டெண் கணக்கிடப்படுவதுடன், இது ஒரு நபரின் உடலில் உணரப்படும் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின்படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்டகால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுமாறும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனிக்குமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீராகாராங்களைப் பருகுமாறும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனைby நிருபர் காவலன்
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்by நிருபர் காவலன்
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்by நிருபர் காவலன்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றனby நிருபர் காவலன்
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது
இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .
மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் 31C அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ,
இது இக்கால பகுதியில் அதிக வெப்ப நிலையாக உணரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பொது வெளியில் ஆறுபேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகமாக கூடலாம் என எதிர் பார்க்க படுகிறது













