Tag: வான்கதவு
Posted in இலங்கை செய்திகள்
நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 06/11/2023
நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தெதுருஓயா மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 09வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் செக்கனுக்கு 13 ஆயிரத்து 800 கனஅடி நீர் தெதுருஓயாவிற்கு விடுவிக்கப்படுகின்றது.
இதனால் தெதுருஓயாவின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருகிறது என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு ஆற்றின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது












