Posted in இலங்கை செய்திகள்

கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு

காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து

கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்

பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை

விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன

ர்

    Posted in இலங்கை செய்திகள்

    உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்

    உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்

    இலங்கை வருகை தந்துள்ள உல்லாச பயணிகள் போக்குவரத்தை கவனத்தில் கொண்டு, தற்பொழுது Kandy to Ella பகுதிக்கான ,ரயில்வே போக்குவரத்து ஒன்று விசேடமாக ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

    நாட்டின் முக்கிய வளர்ச்சியில் ,உல்லாச பயணிகளின் வருகையே வருமானத்தை பெற்று கொடுக்கின்றது .

    அதனால் இந்த அதிரடி நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

      வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

      இலங்கை வவுனியாவில் இருந்து அனுராத புரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள்

      எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு தடை பட்டுள்ளது

      தண்டவாளத்தில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவைகள் இடை நிறுத்த படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு

        இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு

        அரச ஊழியர்கள் வழமைப்போன்று கடமைக்கு சமூகம் அளிப்பதாலும், பாடசாலைகள் மீண்டும்

        திறக்கப்பட்டதினாலும் இன்று (தொடக்கம் சேவையில் ஈடுப்படும் இ.போ.ச பஸ் மற்றும் அலுவலக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளன.

        இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர்

        பண்டுக்க சுவர்ண ஹங்ஷ இதுதொடர்பாக தெரிவிக்கையில், 5,000 க்கு மேற்பட்ட பஸ்கள் நாளாந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

        யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

        கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

        எஸ்13 Engine ஜக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

        New Train Jaffna, 23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.

        550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.

        இந்த ரயிலின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

          இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

          இலங்கையில் நாளை முதல் ரயில்வே சேவைகள் பாதிக்க படும் என ரயில்வே அதிகாரி

          தெரிவித்துள்ளார்

          தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு அது தொடர்பான வேதன விடயங்கள் பேசு பொருளாக

          உள்ளதினால் இந்த தாமதம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்

            மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்

            நாளை முதல் மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவைகளுக்காக 133 ரெயில்களை ஈடுபடுத்த ரெயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

            இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரெயில் பயணிகளுக்கு மாத்திரமே ரெயில் சேவைகள் இடம்பெறும் என்று ரெயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.;

            நாளை கொழும்புக்கு வரும் ரெயில் அளுத்கம, அவிசாவளை ,அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

            இதேவேளை ,பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

            எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்
            சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறினார்.

              Posted in இலங்கை செய்திகள்

              கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

              கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

              கொழும்பு நகரில், தூண்கள் மேல் ஓடும் புதிய ரயில் கட்டமைப்புகளை நிர்மாணிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

              கொழும்பு நகரை மையப்படுத்தி, அரச மற்றும் தனியார்த் துறையினர் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக

              4 ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

              சிவப்பு, பச்சை, நீலம், நாவல் ஆகிய நான்கு வர்ணங்களில் இந்த நான்கு ரயில் பாதைகளும் பெயரிடப்பட்டுள்ளன

              என்றும் தெரிவித்த அவர், 42 கிலோ மீற்றர் நீளமுடைய சிவப்பு ரயில் பாதை, ராகம முதல் புறக்கோட்டை ஊடாக கொட்டாவை வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

              28 கிலோ மீற்றர் நீளமான பச்சை ரயில் பாதை, மொரட்டுவை முதல் நாரஹேன்பிட்டி ஊடாக களனி வரையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

              23 கிலோமீற்றர் நீளமான நீல ரயில் பாதை, கொட்டாவை முதல் இசுறுபாய ஊடாக ஹுனுபிட்டிய வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

              நான்காவது நாவல் ரயில் பாதை, துறைமுக நகர் முதல் பொரளை ஊடாக அத்துருகிரிய வரையில் நிர்மாணிக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              இரு ரயில் நேரெதிர் மோதல் 32 பேர் மரணம் -165 பேர் காயம்

              இரு ரயில் நேரெதிர் மோதல் 32 பேர் மரணம் -165 பேர் காயம்

              எகிப்தில் இரு பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதியதில் சம்பவ இடத்தில முப்பத்தி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்


              மேலும் சுமார் 165 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              காயமடைந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

              குறித்த விபத்து தொடர்பிலான சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in இலங்கை செய்திகள்

                500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

                500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

                கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.

                இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.

                ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக

                களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

                இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

                திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு

                அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.

                இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

                வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.


                இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிற்றி பஸ் சேவை’ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

                உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி

                வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                Home » ரயில் » Page 4
                Posted in இலங்கை செய்திகள்

                தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்

                தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்

                தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது.

                கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே

                கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி

                யாழ்தேவி ரயில் மற்றும் பிற்பகல் 3.35 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து

                கண்டி நோக்கி கடுகதி ரயிலும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.

                இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு,

                மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

                ஆசன முன்பதிவுகளை இன்று முதல் மேற்கொள்ளலாம் என யாழ்

                பிரதான ரயில் நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

                யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

                நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுருந்ததன்

                காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

                இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு

                கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

                எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய

                ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது புகையிர நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை

                மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

                    களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

                    களனிவௌி ரயில் பாதையில் கொடகம ரயில் நிலையத்திற்கு அருகில்

                    மரமொன்று உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக ரயில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

                    இதன் காரணமாக இன்று காலை குறித்த பாதையில் பயணிக்கவிருந்த சில ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                    கொடகம பிரதேசத்தை ஊடருத்து இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் மரமொன்று ரயில் பாதையின் மீது உடைந்து வீழ்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                        ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                        இலங்கை போக்கவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

                        இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம்

                        வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.

                        இதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக

                        ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை

                        முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.

                        நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை

                        வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                            இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு

                            ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல்

                            19 ரயில்; சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                            இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

                            இதற்கமைவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெக்கத்த

                            திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
                            நாவலப்பிட்டியிலில் இருந்து கண்டிக்கும் மாத்தளையி;ல் இருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள்;

                            இடம்பெறவுள்ளன.இதேபோன்று பொல்காவலையில் இருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து காலிக்குமிடையிலும் இதற்கு

                            முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

                            இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே

                            திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவரமேலும் கூறினார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

                                யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

                                வடக்கு தமிழர் அதிகம் வசிக்கும் ,யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் -கொழும்பில் இருந்து காங்கேசன்

                                துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்தில் சிக்கியது .

                                இதில் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது

                                ரயிலை கண்டதும் சாரதி உழவுஇயந்திரத்தில் இருந்து குதித்து தப்பித்தார் ,இதனால் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளது

                                சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது