மருமகனை சுட்டு கொன்ற மாமா
Posted in இலங்கை செய்திகள்

மருமகனை சுட்டு கொன்ற மாமா

மருமகனை சுட்டு கொன்ற மாமா

மருமகனை சுட்டு கொன்ற மாமா அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்

அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை (27) அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஹலகம , கலென்பிந்துனுவேவ, பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய கரியப்பெரும முதியான்சேலாகே மஹிந்த

நவரத்ண பண்டார என்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய போது தனது மனைவியையும் அவரது தந்தையையும் தாக்கியதற்காக 2024.11.22 அன்று

பணியில் இருந்து இடைநீக்கம்

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தனது மனைவியிடம் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியின் தந்தையின் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு

மனைவியை கோடாரியால் தாக்க முயன்ற போது மனைவியின் தந்தை குறித்த நபர் மீது வீட்டில் இருந்த ரைபிள் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் கலென்பிந்துனுவெவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
Posted in இலங்கை செய்திகள்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கர்ப்பமான தங்கையை கவனித்துக்கொள்ள தங்கையின் வீட்டுக்கு அக்காள் சென்றுள்ளார் அப்போது தங்கையின் கணவனுக்கும் அக்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் இனிமை கண்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 55). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள் உள்ளனர். சோனியா, 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். அவரை கவனித்து கொள்ள சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவருக்கும், ஆழ்வானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் சொர்ணாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது

இந்த உண்மை சோனியாவுக்கு தெரிந்த பிறகு இருவரையும் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

ஆழ்வானுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அக்காள்-தங்கை இருவரையும் அடித்து உதைத்து சித்திரவதை செய்தார் இதனால் இருவரும் கொடுங்கையூரில் உள்ள தங்கள் தாய் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

தனது 2 மனைவிகளையும் அழைத்துச்செல்ல மாமனார் வீட்டுக்கு கடந்த 12-ந்திகதி ஆழ்வான், வந்தார். அப்போது அவருக்கும், மாமனார் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் சமாதானமாக பேசுவதுபோல் மாமனார் சாமுவேலை அழைத்துச்சென்ற ஆழ்வான், மாமனாருக்கு மதுபானம் வாங்கி கொடுத்தார். போதை தலைக்கேறியதும் அவரை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.

பின்னர் தனது மனைவிகளுக்கு போன் செய்து, “உங்கள் தந்தையை கடத்தி விட்டேன். என்னுடன் குடும்பம் நடத்த இருவரும் வராவிட்டால் உங்கள் தந்தையை கொன்றுவிடுவேன்” என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்காள்-தங்கை இருவரும் கொடுங்கையூர் பொலிசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் பொலிஸார் செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த சாமுவேலை மீட்டனர். மேலும் ஆழ்வானையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில் மதுபோதைக்கு அடிமையான சாமுவேல், மகள்களின் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் மருமகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரிந்தது.

அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய பொலிஸார், மருமகன் ஆழ்வானை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர் ஏற்கெனவே தனக்கு 2 திருமணம் ஆனதை மறைத்து தற்போது அக்காள்-தங்கை இருவரையும் திருமணம் செய்ததும் தெரியவந்தது. கைதான ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோ