Tag: போலி கல்வி
போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (05) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்
வீதி பகுதியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி



















