Tag: பொங்கினார்
சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய
சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய
பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு
அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பாரளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய
ஜனாதிபதியே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன், தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக
மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
- சாகர கரியவசம் கைது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

















