Posted in Uncategorized

பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் பரவல் மிக வேகமாக பரவி உயிர்களை காவு கொண்டு வருகிறது ,


இதில் இருந்து மக்களை காத்து கொள்ளும் முகமாக மக்கள் பொது பாவனையில் பாவிக்க படும் பேரூந்துகள் ,ரயில்கள்

,போன்றவற்றில் சக மனிதர்களுடன் உரையாட வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது

அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்கள் மூச்சு காற்றின் வழியாக

இந்த நோயானது பரவி விடுகிறது என பிரான்சு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

ரயில்,பேருந்துகளில் உணவுகள் ,பொருட்கள் விற்க தடை – கோட்டா அரசு சாதனை

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை

மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் ,லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு

பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட ,த்தகைய வியாபார

நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அகையால், உடனடியாக ,ந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு

அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, ,ந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.