சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி
Posted in இலங்கை செய்திகள்

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா அவர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களுக்கும் இடையிலான

சந்திப்பொன்று அண்மையில் (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள்

இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence/ AI) யுகத்தில் மக்களும் திறன்களும்” என்பது மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான கருப்பொருளாக

அமைந்திருப்பதுடன், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இது ஆராய்கின்றது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை வலுவூட்டுவதே இந்த மனித அபிவிருத்தி

அறிக்கையின் பிரதான நோக்கம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை மேம்படுத்தும் திட்டத்தின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும், பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொது மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில்

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான

விழிப்புணர்வூட்டும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அசூசா கொபோடா அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் தெரிவித்தார்.

அதற்கமைய தற்போதைய புதிய அரசியல் மாற்றத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில்

பாராளுமன்றத்தில் ஆய்வு மையமொன்றை விரைவில் அமைக்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு ,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/

செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா

ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி. ஏ.டி.தமயந்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக

முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப்

பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.