25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
Posted in இலங்கை செய்திகள்

25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடையில் இருந்த வெலிமடைக்குச் செல்வதற்காக வந்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

வேகக்கட்டுப்பாடின்மையே இவ்விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே
விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

Featured

Loading...