Tag: பதவி உயர்வு
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனபால தற்போது பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றார்
இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு தரங்களை சேர்ந்த 1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ப்ரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை
- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு
- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன
- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை
இராணுவத்தினருக்கு தரம் உயர்வு
இராணுவத்தினருக்கு தரம் உயர்வு
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரிகள் மற்றும் இதர நிலைகளில் உள்ள 1,565 பேரும் தர முயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த குழு அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேஜர் ஜெனரல் தரத்திற்கு 07 பிரிகேடியர்களும். பிரிகேடியர் தரத்திற்கு 12 கேணல்களும், கேணல் நிலைக்கு 37 லெப்டினன்ட் கேணல்களும், 41 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும் உயர்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவம் தோற்றம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ,இலங்கை இராணுவத்தின் முக்கிய நிலைகளில் உள்ள 372 அதிகாரிகளுக்கும் ,அதன் கீழ் நிலையில் உள்ள 1,127 இராணுவ சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இராணுவ தளபதியின் பரிந்துரையினால் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒப்புதலுடன், இந்த பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .
இந்த வருடத்தில் மட்டும் 7.499 பேருக்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது .




















