Tag: திருடர்
சிக்கினார் மிதிவண்டி திருடர்
சிக்கினார் மிதிவண்டி திருடர்
சிக்கினார் மிதிவண்டி திருடர் . யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் மிதிவண்டிகளை திருடி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிதிவண்டி திருடர் ஒருவர் தற்பொழுது காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
காரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இவரே இவ்வாறு மிதிவண்டிகளை நாள்தோறும் திருடி கள்ள சந்தையில்விற்று வந்த சம்பவம் காணப்பட்டுள்ளது .
மிதிவண்டிகளை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து தற்பொழுது இந்த இளம் வயது மிதிவண்டி திருடர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவர்நாள் 12 மிதிவண்டிகள் திருடப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான சந்தேக நபரையும் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி போலீசார் ஊடாக பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இன்று ஒரு மிதிவண்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலே தற்பொழுது மிதிவண்டி திருடர்கள் இந்த மிதிவண்டிகளை இலக்கு வைத்து இவ்வாறு திருடி கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர் .
அதனாலேயே அதிக பணம் சம்பாதித்து வருவதாக மிதிவண்டிகளை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர்
இதனால் தற்பொழுது துவிச்சக்கர வண்டிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது .
திருடர்களும் நாட்டில் அதிகரித்து வருகின்றமையால் இவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்கின்ற நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














