Tag: தனுஷ்க குணதிலக
Posted in இலங்கை செய்திகள்
தனுஷ்க குணதிலக விடுதலை
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2023
தனுஷ்க குணதிலக விடுதலை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்by நிருபர் காவலன்
- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்by நிருபர் காவலன்
- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வுby நிருபர் காவலன்
- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைby நிருபர் காவலன்
- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்துby நிருபர் காவலன்












